ஹேக்கிங் தாக்குதல்: உக்ரைன் அரசின் இணையதளங்கள் முடக்கம்

author img

By

Published : Jan 14, 2022, 4:44 PM IST

Updated : Jan 14, 2022, 5:05 PM IST

உக்ரைன் அரசின் இணையதளங்கள் முடக்கம்

உக்ரைன் நாட்டின் அமைச்சரவை, ஏழு அமைச்சகங்கள், கரூவூலம் தேசிய அவசர சேவை, மாநில சேவைகள் ஆகியவற்றின் இணையதளங்கள் பெரிய அளவிலான ஹேக்கிங் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டன.

கீவ்: பெரிய அளவிலான ஹேக்கிங் தாக்குதலால் உக்ரைன் நாட்டின் பல அரசு இணையதளங்கள் செயல்படவில்லை என அந்நாட்டு அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து உக்ரைன் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஒலேக் நிகோலென்கோ இன்று (ஜனவரி 14) ஃபேஸ்புக் பக்கத்தில், "பெரிய அளவிலான ஹேக்கிங் தாக்குதலால் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இணையதளங்கள், அரசின் பல முகமைகள் (ஏஜென்சிஸ்) தற்காலிகமாகச் செயலிழந்தன. எங்களுடைய வல்லுநர்கள் அதனை மீட்டெடுப்பதற்கான பணிகளில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து உக்ரைன்ஸ்கயா பிரவ்டா செய்தித்தாளில், 'நாட்டின் அமைச்சரவை, ஏழு அமைச்சகங்கள், கருவூலம், தேசிய அவசர சேவை, மாநில சேவைகள் ஆகியவற்றின் இணையதளங்கள் ஹேக்கிங் தாக்குதலால் செயல்படவில்லை' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஹேக்கர்கள் உக்ரைன் நாட்டு மக்களின் தனிநபர் தகவல்களை பொதுவெளியில் விட்டதோடு, வருங்காலங்களில் மோசமான எதிர்வினைகளுக்காகக் காத்திருங்கள். இது உங்களின் எதிர்காலம், நிகழ்காலம், எதிர்காலம் எனவும் எச்சரித்துள்ளனர்.

கடந்த காலங்களில் ரஷ்யாதான் இதுபோன்ற ஹேக்கிங் செயல்களில் ஈடுபட்டுள்ளது, தற்போதும் அவ்வாறே நிகழ்ந்திருக்கும் என ரஷ்யா மீது உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பதற்றம் நிலவிவரும் நிலையில் இந்த ஹேக்கிங் தாக்குதல் அரங்கேறியுள்ளது. மேலும், உக்ரைனை ரஷ்யா கைப்பற்றும் நிலை உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: மயக்கமடைந்த மூதாட்டி: டாக்டராக மாறிய ஆளுநர் அடடே!

Last Updated :Jan 14, 2022, 5:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.