கொலம்பியா துணை அதிபருடன் மீனாட்சி லேகி சந்திப்பு!

author img

By

Published : Sep 7, 2021, 3:41 PM IST

Updated : Sep 7, 2021, 5:09 PM IST

Lekhi

கொலம்பியா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்டா லூசியா ராமிரெஸ் (Marta Lucia Ramirez)-ஐ வெளியுறவு இணையமைச்சர் மீனாட்சி லேகி கொலம்பியாவில் சந்தித்து பேசினார்.

டெல்லி : கொலம்பியா நாட்டின் துணை அதிபரும், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருமான மார்டா லூசியா ராமிரெஸ் (Marta Lucia Ramirez), மீனாட்சி லேகி சந்திப்பு கொலம்பியாவில் நடைபெற்றது. அப்போது இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருவரும் பேசினார்கள்.

இது தொடர்பாக மீனாட்சி லேகி தனது ட்விட்டர் பக்கத்தில், “கொலம்பியாவின் துணை அதிபரும் வெளியுறவு அமைச்சருமான மார்டா லூசியா ராமிரெஸுடன் பயனுள்ள சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது, இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் இருதரப்பு நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. விண்வெளியில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Lekhi
கொலம்பியா துணை அதிபருடன் மீனாட்சி லேகி சந்திப்பு!

முன்னதாக திங்கள்கிழமை (செப்.6), கொலம்பியாவில் உள்ள இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் மீனாட்சி லேகி உரையாற்றினார். அப்போது கொலம்பியா அமைச்சர், அலுவலர்கள் இந்திய சுதந்திர தினத்தின் 75ஆவது ஆண்டுவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

மீனாட்சி லேகி அரசு முறை பயணமாக செப்.4ஆம் தேதி கொலம்பியா சென்றார். அங்கிருந்து அவர் அமெரிக்கா செல்லவுள்ளார். அதன்பின்னர் வருகிற 9ஆம் தேதி டெல்லி திரும்புகிறார்.

Lekhi
மீனாட்சி லேகி ட்வீட்

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2019 ஆம் ஆண்டில், இந்தியாவும் கொலம்பியாவும் தங்கள் இராஜதந்திர உறவுகளின் 60 ஆண்டுகளைக் கொண்டாடின. லத்தீன் அமெரிக்காவில் கொலம்பியா இந்தியாவின் முக்கியமான பங்குதாரராக விளங்குகிறது. கொலம்பியாவுடனான நமது உறவுகள் குறிப்பாக பொருளாதாரம் மற்றும் வணிகத் துறையில் விரிவடைந்து வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சித்து எங்கு தப்பியோடினார்? - மீனாட்சி லேகி கேள்வி

Last Updated :Sep 7, 2021, 5:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.