புதிய நாடாளுமன்றம் நோக்கி மல்யுத்த வீரர்கள் பேரணி... குண்டுக் கட்டாக தூக்கிச் சென்ற போலீசார்!

author img

By

Published : May 28, 2023, 10:23 PM IST

மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்டம்

டெல்லி : இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சிங்கிற்கு எதிராக புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து பிரிஜ் பூஷன் சரண் சிங்கை நீக்கக் கோரியும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மல்யுத்த வீரர், வீராங்கனைகள் வினேஷ் போகாத், சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஏராளாமனார் ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரிஜ் பூஷ்ன் சிங் மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், போலீசார் தங்கள் மீது அடக்குமுறையை ஏவி வருவதாகவும், தங்களது போராட்டத்தை குலைக்க சதி செய்வதாகவும் வீரர்கள் குற்றம் சாட்டினர்.

இதனிடையே இன்று(மே.28) புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி மல்யுத்த வீரர்கள் பேரணி செல்ல முயற்சித்தனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர். வீராங்கனைகளை குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். புதிய நாடாளுமன்றத்திற்கு பேரணியாக சென்று மகா பஞ்சாயத்து நடத்தவிருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.