WPL 2023: அதிக விலைக்கு வாங்கப்பட்ட டாப் 10 வீராங்கனைகள்

author img

By

Published : Feb 14, 2023, 6:26 PM IST

அதிக விலைக்கு வாங்கப்பட்ட டாப் 10 வீராங்கனைகள்

பெண்களுக்கான பிரீமியர் லீக் டி20 போட்டிகள் வரும் மார்ச் மாதம் முதல் தொடங்க உள்ளன. இந்த போட்டிகளில் 5 அணிகள் மட்டுமே பங்கேற்கின்றன. அந்த வகையில், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரப் பிரதேச வாரியர்ஸ் ஆகிய அணிகள் போட்டியில் பங்கேற்க உள்ளன. இந்த அணிகளில் பங்கேற்கபோகும் வீராங்கனைகளுக்கான ஏலம் நேற்று (பிப். 13) மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனைகளான ஸ்ம்ரிதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி ஷர்மா, ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா ஆகியோர் அதிக விலைக்கு வாங்கப்பட்டனர். அதேபோல வெளிநாட்டு வீராங்கனைகளான ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆஷ்லே கார்ட்னர், நடாலி ஸ்கிவர் ஆகியோருக்கும் அதிக விலை கொடுக்கப்பட்டது. ஆகவே, எந்த அணிகள் எந்தெந்த வீராங்கனைகளை வாங்கியுள்ளது. எவ்வளவு தொகைக்கு வாங்கியுள்ளது என்பது குறித்து புகைப்படத்தொகுப்பின் மூலம் காணுங்கள். பின்வரும் புகைப்படங்கள் டாப் 10 வரிசை அடிப்படையில் இடம்பெற்றுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.