பஞ்சுமிட்டாய் சேலை கட்டி..! பொன்னியின் செல்வன் பட நாயகியின் கண்கவர் க்ளிக்ஸ்!

author img

By

Published : Apr 4, 2023, 1:16 PM IST

சோபிதா தூலிபலா

பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்த சோபிதா தூலிபலாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அண்மையின் தூலிபலாவின் சகோதரி சமந்தா தூலிபலாவுக்கு திருமணம் நடைபெற்றது. நீண்ட நாட்களாக பழகி வந்த ஷகில் குப்தா என்ற மருத்துவரை, சம்ந்தா திருமணம் செய்து கொண்டார். தனது சகோதரியின் திருமணத்தை முன்னிட்டு பஞ்சு மிட்டாய் வர்ணத்தின் புடவை கட்டிய தூலிபலா அதை புகைப்படங்களாக மாற்றி சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு உள்ளார். கிறங்கடிக்கும் சோபிதா தூலிபலாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்களை செல்போன் வால்பேப்பர்களாக இளைஞர்கள் வைத்து வருகின்றனர்.

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும், தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவும், சோபிதா தூலிபலாவும் நெருக்கமாக பழகி வருவதாக கூறப்படுகிறது. இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. நாக சைதன்யா - சோபிதா தூலிபலா ஆகியோர் டேட்டிங்கில் ஈடுபட்டு உள்ளதாக கிசுகிசுக்கள் பரவின. இருப்பினும் இதற்கு நடிகை சமந்தா தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.