மிதக்கும் சென்னை.. மீள்வது எப்போது? வெள்ளம் பாதித்த பகுதி மக்கள் வேதனை

author img

By ETV Bharat Tamil Nadu Desk

Published : Dec 6, 2023, 11:01 PM IST

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வந்தது. இதைத்தொடர்ந்து, வங்கக்கடலில் உருவான 'மிக்ஜாம் புயல்' தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களை புரட்டிப்போட்டது எனலாம்.  குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்புயல் மற்றும் அதன் தாக்கத்தால் பெய்த கனமழையால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதன்படி, சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழையால் குடியிருப்பு பகுதிகள் முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்தன. இதனால், பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்ட நிலையில், வெளியில் சென்றால் இடுப்பளவிற்கும் மேலாக மழைநீர் வெள்ளமாக தேங்கி இருப்பதால் வீடுகளுக்குள்ளே முடங்கியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால், சென்னை மாநகராட்சி மழைநீரை மோட்டார்கள் கொண்டு அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, சென்னை மழைநீர் வடிகால் பணிகள் 97% முடிவடைந்ததாக மாநகராட்சி சார்பில் கூறப்பட்டிருந்த நிலையில், இவ்வளவு தண்ணீர் தேங்குவதற்கான காரணம் என்ன? என பல தரப்பினரும் பல்வேறு கேள்விகளையெழுப்பி வருகின்றனர். சென்னை வேளச்சேரி, பள்ளிக்கரணை, ஒக்கியம் துரைப்பாக்கம் உள்ளிட்டப் பகுதிகளில் வெள்ளத்தால் வீடுகளில் முடங்கியுள்ளவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஏற்பட்ட மின்தடை விரைவில் சரிசெய்யப்படும் எனக் கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, அதுவரை அமைதிகாக்க வேண்டும் என கோரியுள்ளார். இந்த நிலையில், கனமழை மற்றும் வெள்ளப் பாதிப்பால் சென்னையில் ஆங்காங்கே இதுவரையில் 23 பேரும், 311 கால்நடைகள் வரையும் உயிரிழந்த சம்பவமும் அரங்கேறியது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வந்தது. இதைத்தொடர்ந்து, வங்கக்கடலில் உருவான 'மிக்ஜாம் புயல்' தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களை புரட்டிப்போட்டது எனலாம்.

குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்புயல் மற்றும் அதன் தாக்கத்தால் பெய்த கனமழையால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதன்படி, சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழையால் குடியிருப்பு பகுதிகள் முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்தன. இதனால், பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்ட நிலையில், வெளியில் சென்றால் இடுப்பளவிற்கும் மேலாக மழைநீர் வெள்ளமாக தேங்கி இருப்பதால் வீடுகளுக்குள்ளே முடங்கியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால், சென்னை மாநகராட்சி மழைநீரை மோட்டார்கள் கொண்டு அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, சென்னை மழைநீர் வடிகால் பணிகள் 97% முடிவடைந்ததாக மாநகராட்சி சார்பில் கூறப்பட்டிருந்த நிலையில், இவ்வளவு தண்ணீர் தேங்குவதற்கான காரணம் என்ன? என பல தரப்பினரும் பல்வேறு கேள்விகளையெழுப்பி வருகின்றனர். சென்னை வேளச்சேரி, பள்ளிக்கரணை, ஒக்கியம் துரைப்பாக்கம் உள்ளிட்டப் பகுதிகளில் வெள்ளத்தால் வீடுகளில் முடங்கியுள்ளவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஏற்பட்ட மின்தடை விரைவில் சரிசெய்யப்படும் எனக் கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, அதுவரை அமைதிகாக்க வேண்டும் என கோரியுள்ளார். இந்த நிலையில், கனமழை மற்றும் வெள்ளப் பாதிப்பால் சென்னையில் ஆங்காங்கே இதுவரையில் 23 பேரும், 311 கால்நடைகள் வரையும் உயிரிழந்த சம்பவமும் அரங்கேறியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.