சிவப்பு நிற சேலையில் த்ரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம்!
Updated: Nov 20, 2023, 10:24 AM |
Published: Nov 20, 2023, 10:24 AM
Published: Nov 20, 2023, 10:24 AM
Follow Us 

சவுத் குயின் என அழைக்கப்படும் நடிகை த்ரிஷா 1983 ஆம் ஆண்டு, மே 4ஆம் தேதி சென்னையில் பிறந்தார். தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக நீடித்து வரும் திரிஷா இதுவரை 67 படங்களில் நடித்துள்ளார். ஜோடி படத்தில் துணை நடிகையாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். 2002ல் அமீர் இயக்கத்தில் வெளியான மெளனம் பேசியதே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நாயகியாக நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

1/ 6
த்ரிஷா, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களில் நடித்து தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். த்ரிஷா தற்போது, மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். நடிகர் விஜயுடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள த்ரிஷா கடைசியாக குருவி (2008) படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர். இந்நிலையில், விஜய் மற்றும் த்ரிஷா, 14 வருடங்களுக்குப் பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்தனர். லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து, லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு சிவப்பு நிற சேலையில் வந்த த்ரிஷாவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி லைக்ஸ்களை அள்ளி வருகிறது. இந்நிலையில், த்ரிஷா குறித்து நடிகர் மன்சூன் அலிகான் பேசியதற்கு, த்ரிஷா உட்பட பலர் கண்டனம் தெரிவித்த நிலையில், கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இல்லாததால், தனது ஆதங்கத்தை காமெடியாக கூறினேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் பதிலளித்துள்ளார்.
Loading...
Loading...
Loading...