சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன் க்ளிக்ஸ்!!
Published: May 24, 2023, 6:09 PM

வாணி போஜன் நடிகையாக ஓர் இரவு என்னும் தமிழ் படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமானார். அதன் பின் பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ஆஹா, மாயா உள்ளிட்ட தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 2013இல் தெய்வமகள் என்னும் மெகா தொடரில் வாணி போஜன் நடித்த சத்யா என்னும் கதாபாத்திரம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த கதாபாத்திரத்திற்காக பல்வேறு விருதுகளை பெற்றார். பின்னர் பிரபலமடைந்த வாணி போஜனுக்கு தமிழ் சினிமாவில் பல்வேறு பட வாய்ப்புகள் கிடைத்தது. தமிழ் சினிமாவில் 2020இல் வெளியான ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முன்னதாக தெலுங்கு திரையுலகில் 2019இல் மேகு மாத்ரமே சேப்தா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஓ மை கடவுளே படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான சைமா விருதை வென்றார். 2021ஆம் ஆண்டு வைபவின் ஜோடியாக டிரிபிள்ஸ் என்னும் வெப் சீரியஸில் நடித்தார். பின்னர் நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும் என்ற படத்தில் நடித்தார். தற்போது பல்வேறு தமிழ் படங்களில் நடித்து வருகிறார்

