தங்கலான் பட நடிகை மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!
Updated: Sep 15, 2023, 7:21 PM |
Published: Sep 15, 2023, 7:21 PM
Published: Sep 15, 2023, 7:21 PM
Follow Us 

பிரபல ஒளிப்பதிவாளரின் மகளான மாளவிகா மோகனன் கேரளாவில் பிறந்தார். மும்பையில் கல்லூரி படிப்பை முடித்த மாளவிகா மோகனன் துல்கர் சல்மானுடன் பட்டம் போலே என்னும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்தில், அவரின் கதாபாத்திரத்திற்கு தானே ஆடை வடிமைப்பாளராக இருந்தார். அதன்பின், நிர்ணயகம் என்னும் மலையாள படத்தில் நடித்தார். 2016ஆம் ஆண்டு மாளவிகா மோகனன் நானு மட்டு வரலட்சுமி என்னும் படத்தில் கன்னட சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து, மலையாளத்தில் 2017இல் வெளியான கிரேட் ஃபாதர் என்னும் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில மம்மூட்டி, ஆர்யா, சினேகா ஆகிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

1/ 11
பிரபல ஒளிப்பதிவாளரின் மகளான மாளவிகா மோகனன் கேரளாவில் பிறந்தார். மும்பையில் கல்லூரி படிப்பை முடித்த மாளவிகா மோகனன் துல்கர் சல்மானுடன் பட்டம் போலே என்னும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்தில் அவரின் கதாபாத்திரத்திற்கு தானே ஆடை வடிமைப்பாளராக இருந்தார். அதன்பின் நிர்ணயகம் என்னும் மலையாள படத்தில் நடித்தார். 2016ஆம் ஆண்டு மாளவிகா மோகனன் நானு மட்டு வரலட்சுமி என்னும் படத்தில் கன்னட சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து மலையாளத்தில் 2017இல் வெளியான கிரேட் ஃபாதர் என்னும் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில மம்மூட்டி, ஆர்யா, சினேகா ஆகிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 2017இல் 'beyond the clouds' என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்த படம் மாளவிகா மோகன் திரை வாழ்வில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இதனையடுத்து 2018இல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் நடித்தார். இந்த படம் மூலம் தமிழ் சினிமாவில் மாளவிகா மோகனன் அறிமுகமானார். இதன்பின் 2021இல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. இதனையடுத்து தனுஷ் நடித்த மாறன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...
Loading...
Loading...