"கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு" - கருப்பு உடையில் கவர்ந்து இழுக்கும் ஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..
Updated: Nov 20, 2023, 6:57 PM |
Published: Nov 20, 2023, 6:57 PM
Published: Nov 20, 2023, 6:57 PM
Follow Us 

அசத்தலான அழகால் ரசிகர்களை அசர வைக்கும் நடிகைகள் மத்தியில், தனது அழகாலும், திறனையாலும், புது புது ட்ரெண்டாலும், ரசிகர்களை கட்டி இழுத்து வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பட்டியலில் வலம் வரும் இவரின் கருப்பு உடை அணிந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

1/ 9
நடிகர் கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்துடன் திரைத்துறைக்குள் நுழைந்த ஸ்ருதி ஹாசன், தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருகிறார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'ஏழாம் அறிவு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் கதாநாயகியாக என்டரி கொடுத்தார். இதில் இவரது எதார்த்தமான நடிப்பு தமிழ் ரசிகர்களை இவர் பக்கம் கவர்ந்து இழுத்தது. அதையடுத்து தனுஷ் உடன் இணைந்து '3' படத்தில் நடித்து அசத்தினார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து, அஜித், விஜய், சூரிய உள்ளிட்ட தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. இவர் நடிகை மட்டுமல்ல சிறந்த பாடகியும் ஆவார். தமிழில் பல ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். தற்போது பிரபாஸ் உடன் இணைந்து 'சலார்' என்ற படத்திலும் நடித்துள்ளார். தொடர்ந்து ட்ரெண்டுக்குள்ளேயே வலம் வரும் ஸ்ருதி ஹாசன் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்வதில் ப்ரேக் எடுப்பதே இல்லை. அந்த வகையில், கருப்பு உடையில் ரசிகர்களை கிரங்கடிக்கும் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Loading...
Loading...
Loading...