பிரபல பாலிவுட் நடிகை அலியா பட் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!
Published: May 25, 2023, 4:27 PM

அலியா பட் பிரபல பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட்டின் மகள் ஆவார். அலியா பட் 2012ஆம் ஆண்டு கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டுடண்ட் ஆப் தி இயர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்தில் அலியா பட்டின் நடிப்புக்கு மிகப்பெரும் அங்கீகாரம் கிடைத்தது. இதனையடுத்து இம்தியாஸ் அலி இயக்கி 2014ஆம் ஆண்டு வெளியான ஹைவே படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த படத்திற்காக பிலிம்பேர் விருது பெற்றார். அதன் பிறகு சேத்தன் பகத் நாவலை தழுவி இயக்கப்பட்ட ’2 ஸ்டேட்ஸ்’ படத்தில் நாயகியாக நடித்தார். இதனையடுத்து ஷாகித் கபூருக்கு ஜோடியாக ஷாந்தார் படத்தில் நடித்தார். 2016ஆம் ஆண்டுக்கு பிறகு படத்தின் கதைக்கேற்ப குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். கபூர் & சன்ஸ், உத்தா பஞ்சாப் உள்ளிட்ட படங்களில் அலியா பட்டின் கதாபாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. பின்னர் ஷாருக்கானுடன் இணைந்து டியர் சிந்தகி என்னும் படத்தில் நடித்தார். பிரபல இயக்குநர் ராஜமௌலி இயக்கி ஆஸ்கர் விருது பெற்ற ஆர் ஆர் ஆர் படத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்போது ரன்வீர் சிங்குடன் இணைந்து ராக்கி ஆவுர் ராணி என்னும் படத்தில் நடித்து வருகிறார். அலியா பட் பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ராஹா என்ற பெயரில் பெண் குழந்தை உள்ளது.

