இளைஞர்களை கிறங்கடிக்கும் 'புட்ட பொம்மா' லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

author img

By

Published : Apr 10, 2023, 2:29 PM IST

pooja hegde photos

பூஜா ஹெக்டே மும்பையில் மஞ்சுநாத் ஹெக்டே மற்றும் லதா ஹெக்டே என்ற தம்பதிக்கு மகளாய் பிறந்தவர். பூஜா ஹெக்டே கர்நாடகா 'துளு' என்ற மொழியைத் தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும், ஹிந்தி, மராத்தி ஆங்கிலம் என சரளமாகப் பேசக்கூடிய திறமை கொண்டவர். இவர் மும்பையில் உள்ள எம்.எம்.கே கல்லூரியில் இளங்கலை பட்டம் பயின்றார். இவருக்கு மாடலிங் துறையில் அதிகம் ஆர்வம் கொண்டதால், கல்லூரி படிக்கும் போதே பல போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு 'மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா' என்ற அழகுப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்துப் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து தமிழில் மிஸ்க்கின் இயக்கிய "முகமூடி" என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவரது முதல் படமே இவருக்கு ஹிட் கொடுத்தது. அதன் பின் 2012 ல் 'ஒக்க லைலா கோசம்' என்ற தெலுங்கு படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவிலும் பிரபலமானார். 2016-ல் மோஹன்ஜோ தாரோ என்ற ஹிந்தி படத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிக் கொண்டவர் பூஜா ஹெக்டே. தற்போது வரை இவரது திரைப்பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.