ஷாருக்கான் உடன் சண்டை செய்யும் விஜய் சேதுபதி!

author img

By

Published : Aug 3, 2022, 7:37 PM IST

ஷாருக்கான் உடன் சண்டை செய்யும் விஜய் சேதுபதி!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் 'ஜவான்' திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷாருக்கான் நடிப்பில் அட்லீ முதல்முறையாக ஹிந்தியில் இயக்கிவரும் திரைப்படம் ’ஜவான்’. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். கெளரிகான் தயாரிப்பில், இந்தப் புதிய படத்தை ‘ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் வெளியிட உள்ளது.

இந்தப் படம் அடுத்தாண்டு ஜூன் 2ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு கடந்த மாதம் டைட்டில் வீடியோ மூலம் அறிவித்திருந்தது. இந்நிலையில் 'ஜவான்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவிருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. இந்த செய்தி உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விஜய் சேதுபதியின் நடிப்பை ஷாருக்கான் பாராட்டியிருந்தார். தற்போது ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக வரும் செய்தியால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: அஜித்தின் 30 ஆண்டுகால திரைப்பயணம் - சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.