நாளை வெளியாகிறது ’பொன்னியின் செல்வன்’ டீசர்

author img

By

Published : Jul 7, 2022, 9:58 PM IST

நாளை வெளியாகிறது ’பொன்னியின் செல்வன்’ டீசர்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் டீசர் நாளை (ஜூலை 8) வெளியாகவுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் தோற்றத்தை படக்குழு அறிமுகப்படுத்தி வருகிறார்கள். விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோரின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து நாளை (ஜூலை 8) பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் தமிழ் டீசரை நடிகர் சூர்யா வெளியிடுகிறார்.

மேலும் இந்தியில் அமிதாப்பட்சன், மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் மகேஷ்பாபு, கன்னட மொழியில் ரக்ஷிட் ஷெட்டி ஆகியோர் இப்படத்தின் டீசரை வெளியிடவுள்ளனர்.

இதையும் படிங்க: குந்தவையிடம் லொகேஷன் கேட்டு ட்வீட் செய்த வந்தியத்தேவன், பதிலளித்த குந்தவை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.