வெளியானது அஜித் நடிக்கும் 'துணிவு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

author img

By

Published : Sep 21, 2022, 7:25 PM IST

துணிவு

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வரும் 61ஆவது படத்திற்கு 'துணிவு' என தலைப்பிடப்பட்டுள்ளது.

ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வரும் 61ஆவது படத்திற்கு 'துணிவு' என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளனர்.

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' படத்திற்கு பிறகு அஜித் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் என்பதால் ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கி கொள்ளை தொடர்பான கதையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 'துணிவு' திரைப்படம் அடுத்த ஆண்டு, பொங்கல் பண்டிகைக்கு நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்துடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 'துணிவு' என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: நான் இயக்குநராக இருந்தபோது பல கோடிகள் கையில் இருந்தது - ஆர்.கே.செல்வமணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.