'The Elephant Whisperers' ஒலி பதிவு.. சவுண்ட் மிக்ஸிங் வல்லுநர் லாரன்ஸ் கூறிய சுவாரஸ்ய நிகழ்வு!

author img

By

Published : Mar 16, 2023, 8:00 AM IST

Sound mixing engineer Lawrence says he does not expect an Oscar for The Elephant Whisperers

ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என The Elephant Whisperers ஆவண குறும்படத்தில் பணியாற்றிய சவுண்ட் மிக்ஸிங் இன்ஜினீயர் லாரன்ஸ் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

The Elephant Whisperers படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என சவுண்ட் மிக்ஸிங் இன்ஜினீயர் லாரன்ஸ் தெரிவித்துள்ளார்

சென்னை: அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் இந்தியாவிற்கு இரண்டு விருதுகள் கிடைத்தது. குறிப்பாக தமிழ்நாட்டிற்கு கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கிய The Elephant Whisperers என்ற ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இந்த படமானது முதுமலை வனப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. தாயிடமிருந்து பிரிந்து வந்த இரண்டு யானை குட்டிகளை பழங்குடி இனத்தை சேர்ந்த பொம்மன், பெள்ளி என்ற தம்பதியினர் அன்போடு பராமரிப்பதை உணர்வுப்பூர்வமாக எடுத்துள்ளனர்.

இந்த படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (மார்ச் 15) பழங்குடி இனத்தை சேர்ந்த தம்பதிகளான பொம்மன், பெள்ளி ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் யானைகளுக்கான தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தம்பதிகளின் ஆவணப்படத்திற்கு சவுண்ட் மிக்ஸிங் பணியானது மிகவும் முக்கியமாகப் பேசப்பட்டது. ஆவணப்படத்தின் எதார்த்த நிலைக்கு ஏற்ப ஆடியோ பதிவு செய்யப்படுள்ளது. இந்த ஆவணப்படத்தில் பணியாற்றிய சவுண்ட் மிக்ஸிங் இன்ஜினீயர் லாரன்ஸ் ஈ டிவி பாரத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், "The Elephant Whisperers ன் சவுண்ட் மிக்ஸிங் இன்ஜினீயராக இருந்தேன். ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் The Elephant Whisperers ஆவண குறும்படத்திற்கு விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு தான் இந்த ஆவண குறும்படத்திற்கான ஆடியோ மிக்ஸிங் பணியை தொடங்கினோம். முதலில் இந்த குறும்படம் 15 வது இடத்தில் இருந்தது. அதன் பிறகு 5 வது இடத்தை பிடித்து ஆஸ்கர் விருதையும் தட்டிச் சென்றது. மேலும் இந்த படக்குழுவின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் சவுண்ட் டிசைனர் மற்றும் படக்குழுவில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என கூறினார்.

மேலும், ஆஸ்கர் விருது கிடைக்குமா என்று எதிர்பார்த்தீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த லாரன்ஸ், "இந்த குறும்படம் ஆஸ்கருக்கு போகும் என்று எங்களுக்கு தெரியாது. எனக்கு ஒரு 40 நிமிடமுள்ள குறும்படம் சவுண்ட் மிக்ஸ் செய்ய வந்தது. மேலும் நெட்பிளிக்சில் டிசம்பர் 8 வெளியிடப்படும் என்று கூறினார்கள். அதன் பிறகு எனக்கு எதுவும் தெரியாது. இந்த குறும்படம் ஆஸ்கர் விருதுக்காக 15வது இடத்திலிருந்த போதுதான் தெரியவந்தது. கடைசி நேரத்தில் அவசர அவசரமாக ஆடியோ மிக்ஸிங் செய்து அனுப்பி வைத்தோம்" என தெரிவித்தார்.

இந்த ஆவணப்படத்தைப் பற்றி பேசிய அவர், "படம் பார்க்கும்போது உணர்வுப்பூர்வமாக இருந்தது. மேலும் யானைக்கும் அதனை வளர்த்த பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதிக்கும் ஒரு பிணைப்பு இருந்தது. இதனை பார்க்கும்போது எங்களுக்கு படம் பிடித்திருந்தது. மேலும் இந்த படம் ஆஸ்கர் பரிந்துரை பட்டியலுக்கு சென்ற போது, இந்த குறும்படத்திற்கு விருது கிடைக்கும் என்று எங்களுக்கு தோன்றியது. இது ஒரு பெரிய சாதனை. ஏனெனில் வெளிநாட்டுப் படைப்புகளையும் தாண்டி இந்த விருது கிடைத்துள்ளது.

இந்த கதையை இயக்குனர் ஐந்து வருடங்களாக எடுத்து வந்துள்ளார். ஒரு படத்துக்கு சவுண்ட் மிக்ஸிங் மிக முக்கியம். இறுதியில் சவுண்ட் மிக்ஸிங் செய்ய என்னை அணுகினார்கள். மேலும் என்னுடைய கருத்தை பகிர்ந்து கொண்டேன். இந்த படத்தின் இசை அமைப்பாளர் அமெரிக்காவிலிருந்ததால் அங்கிருந்து சிறிது சிறிதாக ஆடியோவை அனுப்பி அதனை முழுமையாக சவுண்ட் மிக்ஸிங் செய்து அவருக்கு அனுப்பி வைப்பேன். இறுதியாக சவுண்ட் மிக்ஸிங் முழுமை பெற்று இந்த குறும்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது" என்றார்.

இதையும் படிங்க: "தேசிய விருது இன்னும் கிடைக்கல ஆனால் ஆஸ்கர் வாங்கிட்டேன்" - பாடலாசிரியர் சந்திரபோஸ் சிறப்பு நேர்காணல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.