ஓடிடியில் வெளியாகும் சாய் பல்லவியின் ’கார்கி’

author img

By

Published : Aug 4, 2022, 1:11 PM IST

ஓடிடியில் வெளியாகும் சாய் பல்லவியின் ’கார்கி’

நடிகை சாய் பல்லவி நடிப்பில் இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ’கார்கி’ திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வரும் 12 ஆம் தேதி வெளியாகிறது.

நடிகை சாய் பல்லவி நடிப்பில் இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி ஜூலை 15 ஆம் தேதி வெளியான திரைப்படம் ’கார்கி’. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இப்படத்தை தாமஸ் ஜார்ஜ், இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன், ரவிச்சந்திரன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோரின் 2D எண்டர்டைன்மண்ட் வெளியிட்டுள்ளது.

தவறுதலாக கைது செய்யப்பட்ட தனது தந்தையை வெளியே கொண்டு வர போராடும் மகளின் கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இப்படம் வருகிற 12ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சமுத்திரக்கனி - தம்பி ராமையா காம்போ... உருவாகும் புதிய படம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.