தந்தைக்காக போராடும் மகளின் கதை? வெளியானது சாய் பல்லவியின் 'கார்கி' டிரைலர்

author img

By

Published : Jul 7, 2022, 9:43 PM IST

தந்தைக்காக போராடும் மகளின் கதை: வெளியானது சாய் பல்லவியின் 'கார்கி' டிரைலர்

நடிகை சாய் பல்லவியின் நடிப்பில் இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், உருவாகியுள்ள ’கார்கி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகிவுள்ளது.

நடிகை சாய் பல்லவியின் நடிப்பில் இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், உருவாகி ஜூலை 15 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் ’கார்கி’. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தவறுதலாக கைது செய்யப்பட்ட தனது தந்தையை வெளியே கொண்டுவர போராடும் மகளின் கதையாக இருக்கும் என்பது டிரைலரை பார்க்கும் பொழுதே புலப்படுகிறது.

இப்படத்தை தாமஸ் ஜார்ஜ், இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன், ரவிச்சந்திரன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோரின் 2D எண்டர்டைன்மண்ட் வெளியிடுகிறது.

சாய் பல்லவி கதைக்கும் தனது கதாப்பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் சமீப காலமாக நடித்து வருகிறார். அதற்கு இறுதியாக சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கில் வெளியான ஷியாம் சிங்க ராய் மற்றும் விராட்ட பர்வம் ஆகிய படங்கள் சான்றாகும். தமிழில் பாவக்கதைகளுக்கு பிறகு வெளியாகும் சாய் பல்லவியின் படம் என்பதால் ’கார்கி’ திரைப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இதையும் படிங்க: குந்தவையிடம் லொகேஷன் கேட்டு ட்வீட் செய்த வந்தியத்தேவன், பதிலளித்த குந்தவை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.