Ayali webseries review: பெண்ணியம் போற்றும் 'அயலி'-க்கு குவியும் வாழ்த்து!

Ayali webseries review: பெண்ணியம் போற்றும் 'அயலி'-க்கு குவியும் வாழ்த்து!
பெண் கல்வி, மாதவிடாய், மூடநம்பிக்கை என பெண்கள் குறித்து பேசும் ’அயலி’ தொடர், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
சென்னை: எஸ். குஷ்மாவதி தயாரிப்பில் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘அயலி’ தொடர், ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதில் அறிமுக நடிகை அபி நக்சத்ரா முக்கிய பாத்திரத்தில் நடிக்க அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த இணையத் தொடர் பெண் கல்வி, மாதவிடாய் மற்றும் மூடநம்பிக்கைகள் குறித்துப் பேசுகிறது. இப்படம் பத்திரிகையாளர்களுக்குச் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த பலரும் ‘அயலி’ தொடரை மிகவும் பாராட்டியுள்ளனர். அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய தொடர் அயலி என்றும் குறிப்பாகப் பெண்கள் பார்க்க வேண்டிய படம் என்றும் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ கனவுடன் இருக்கும் சிறுமி தாம் பருவமெய்தியதை மறைத்து மருத்துவரான முயற்சிக்கும் கதையாக இது இருந்தாலும் இப்படம் பேசும் விஷயங்கள் நிச்சயம் அதிர்வலைகளை ஏற்படுத்துபவையாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் விலங்கு வரிசையில் இந்த இணையத் தொடரும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறும் என்றும் இந்த ஆண்டின் முதல் வெற்றிகரமான இணையத் தொடராக இது இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
