பாலய்யா vs ஆண்டவர் : தெலுங்கு பாடலை நினைவூட்டுகிறதா 'பத்தல' பாடல்
Updated on: May 12, 2022, 12:13 AM IST

பாலய்யா vs ஆண்டவர் : தெலுங்கு பாடலை நினைவூட்டுகிறதா 'பத்தல' பாடல்
Updated on: May 12, 2022, 12:13 AM IST
நடிகர் கமலின் விக்ரம் திரைப்படத்தின் பத்தல பாடல் வெளியாகியுள்ள நிலையில் இந்த டியூன் தெலுங்கு நடிகர் பால கிருஷ்ணாவின் அகண்டா பட பாடலை நினைவூட்டுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவிருக்கும் விக்ரம் படத்தின் முதல் சிங்கிளான ‘பத்தல பத்தல’ பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும், இதில் வரும் பீட் கொஞ்சம் பாலய்யா நடித்து வெளிவந்த ’அகண்டா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஜெய் பாலய்யா’ பாடலில் வரும் பீட்டை நியாபகப்படுத்த தான் செய்கிறது. இதனை ஒப்பிட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இருந்தாலும் தர லோக்கலான இந்த பாடலில் கமலின் நடனத்தை ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். எதுஎப்படி இருந்தாலும் தற்போதைய தமிழ் சினிமாவைக் காப்பாற்றும் ஒரே ஆபத்பாந்தவன், அனிருத் தான். அதேபோல் இந்த ஆண்டில் திரையில் வெளியான பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள் விமர்சன ரீதியாக சிக்கலை சந்தித்த நிலையில் ‘விக்ரம்’ மட்டுமே ஒரே நம்பிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: 67 வயதில் அசால்ட் சம்பவம்.. பிளாஷ் பேக் சென்ற கமல் ரசிகர்கள்...
