’மாயோன்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு : தெலுங்கில் பிரமாண்டமாக வெளியிட படக்குழு முடிவு..!

author img

By

Published : Jun 25, 2022, 6:01 PM IST

’மாயோன்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு : தெலுங்கில் பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு முடிவு..!

தமிழ்நாட்டில் ’மாயோன்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அப்படக்குழு தெலுங்கிலும் படத்தை மிக பிரமாண்டமாக வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

நடிகர் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடிப்பில் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் திரைக்கதை மற்றும் தயாரிப்பில் என் கிஷோர் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் நேற்று(ஜூன் 24) வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் ’மாயோன்’.

அறிவியலையும், ஆன்மீகத்தையும் தொடர்புபடுத்தி உருவாக்கியிருந்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் குடும்பத்துடன் கொண்டாடும் படமாக இடம் பிடித்துள்ளது. மேலும், பார்வையற்றவர்களுக்கான பிரத்தியேகமாக ஆடியோ டிஸ்கிரிப்ஷனுடன் படம் வெளியாகியதும் மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது.

தமிழ்நாட்டில் கிடைத்த இத்தகைய வரவேற்பின் காரணமாக இந்தப் படத்தை வரும் ஜூலை 7ஆம் தேதி தெலுங்கில் மிக பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. படத்தை பார்த்த தெலுங்கு விநியோகிஸ்தர் இந்தப் படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும் என படத்தை 350க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைப் போலவே தெலுங்கிலும் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ’வாரிசு’ படத்தில் ரீமிக்ஸ் ஆகும் "ஆல் தோட்ட பூபதி" பாடல்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.