ETV Bharat / entertainment

ஜேம்ஸ் பாண்ட் போன்று இந்தியன் ஸ்பை த்ரில்லர் படம் சர்தார் - நடிகர் கார்த்தி

author img

By

Published : Oct 14, 2022, 10:27 PM IST

சர்தார் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஜேம்ஸ் பாண்ட் போன்று இந்தியன் ஸ்பை த்ரில்லர் படம் சர்தார் என நடிகர் கார்த்தி கூறினார்

ஜேம்ஸ் பாண்ட் போன்று இந்தியன் ஸ்பை த்ரில்லர் படம் சர்தார்
ஜேம்ஸ் பாண்ட் போன்று இந்தியன் ஸ்பை த்ரில்லர் படம் சர்தார்

சென்னை: வடபழனியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் ப்ரின்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாக நடிகர் கார்த்தியின் சர்தார் திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, ரித்விக் உள்ளிட்ட நடிகர் நடிகையும் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் எடிட்டர் ரூபன், கலை இயக்குநர் கதிர், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ், இயக்குனர் பி.எஸ். மித்ரன் கலந்துகொண்டு பேசினர்.

நடிகர் கார்த்தி பேசுகையில், ’மித்ரனின் இரும்புத்திரை படம் பார்த்த பிறகு செல்போனுக்கு மெசேஜ் வந்ததும் பக் என இருந்தது. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வசூல் சாதனையும் செய்தது.

80களின் காலகட்டத்தில் ஒரு நாடக நடிகன் உளவாளியாக மாறியது தொடர்பாக மித்ரன் கூறிய ஒன்லைன் மிகவும் புதுமையாக இருந்ததால் உற்சாகப்படுத்தியது. அங்கு இருந்து தொடங்கியது இந்த பயணம், என்னுடைய சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக சர்தார் இருக்கும்.

ஜேம்ஸ் பாண்ட் போன்று, பிகினி, சிக்ஸ் பேக் இல்லாத இந்தியன் ஸ்பை த்ரில்லர் படம் சர்தார். என்னுடைய பட வரிசையில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம், சர்தார்.

அண்ணா (சூர்யா) அடிக்கடி ஒன்று சொல்வார், ஒரு வெற்றி வேண்டும் என நினைத்தால் அதற்கு நீ தகுதியானவனா என பார். எனவே, அடிக்கடி அந்த அளவிற்கு உழைத்திருக்கோம். பொன்னியின் செல்வனின் வந்தியத்தேவனுக்கு நீங்கள் கொடுத்த வரவேற்புமிக்க நன்றி.

ஜேம்ஸ் பாண்ட் போன்று  இந்தியன் ஸ்பை த்ரில்லர் படம் சர்தார்
ஜேம்ஸ் பாண்ட் போன்று இந்தியன் ஸ்பை த்ரில்லர் படம் சர்தார்

இந்த தீபாவளிக்கு சர்தார், பிரின்ஸ் இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. இரண்டும் வேறு வேறு களம். இரண்டுக்கும் ஆதரவு கொடுங்கள். இருவருக்கும் சிறப்பான தீபாவளியாக அமைய வேண்டும் என வேண்டுகிறேன்’ என்றார்.

இயக்குநர் மித்ரன் பேசுகையில், 'இந்தப் படத்திற்காக அநேக மெனக்கெடல் இருந்தது. அது அனைத்திற்கும் தயாரிப்பாளர் உதவியாக இருந்தது. அவர் கொடுத்த ஊக்கம் தான் எங்களுக்கு படத்தை சிறப்பாக செய்து முடிக்க உதவியது. இரவு பகலாக அனைவரும் பணியாற்றி உள்ளோம். கார்த்தியை மிகவும் கொடுமைப்படுத்தியுள்ளேன்’ என்றார். அப்போது மேடையில் லைலாவை போல் பேசி இமிடேட் செய்தார், இயக்குநர் மித்ரன்.

ஜேம்ஸ் பாண்ட் போன்று  இந்தியன் ஸ்பை த்ரில்லர் படம் சர்தார்
ஜேம்ஸ் பாண்ட் போன்று இந்தியன் ஸ்பை த்ரில்லர் படம் சர்தார்

மேலும், ’என்னால் சினிமாவில் பெரிய படங்கள் ஒப்புக்கொண்டு அதை சிறப்பாக செய்து முடிக்க என் மும்மூர்த்திகள் ஜார்ஜ், திலீப், ரூபன் தான் காரணம். என்னை தலையில் கொட்டிக்கொண்டே இருப்பார்கள். அந்த கொட்டு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கிறேன். இசையமைப்பாளர் ஜீ.வி பிரகாஷ் குமார் உடன் பணியாற்றியது ஜாலியான அனுபவமாக இருந்தது’ எனக் கூறினார்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதையும் படிங்க: 'ரயில்ல தள்ளிவிட்டு தண்டனை கொடுங்க...' - சத்யா மரணம் குறித்து விஜய் ஆண்டனி ட்வீட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.