'இளையராஜாவுக்கு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம்' - கமல்ஹாசன் ட்வீட்

author img

By

Published : Jul 7, 2022, 8:21 AM IST

இளையராஜாவுக்கு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம்

மாநிலங்களவை நியமன எம்பியாக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை: மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருடன் தடகள வீராங்கனை பி.டி. உஷா, கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெக்டே, இயக்குனர் ராஜமவுலியின் தந்தையும், திரைக்கதை ஆசிரியருமான விஜயேந்திர பிரசாத் உள்ளிட்டோரும் மாநிலங்களவை நியமன எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, இளையராஜாவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  • ஒப்பாரும் மிக்காரும் இல்லாத @ilaiyaraaja அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்.

    — Kamal Haasan (@ikamalhaasan) July 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில், "இளையராஜா கலைச் சாதனையை கௌரவிக்க வேண்டும் எனில் ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும், மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Heartiest Congratulations to Shri @ilaiyaraaja the unparalleled Music Genius.Your presence in the Rajya Sabha would certainly add the touch of Genius to the Upper-house.A matter of personal delight for me as I had the good fortune of you composing music for several of my films.

    — Chiranjeevi Konidela (@KChiruTweets) July 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவி ட்விட்டரில், "கே.வி.விஜயேந்திர பிரசாத், இளையராஜா ஆகிய திரையுலகைச் சேர்ந்த மிகவும் தகுதி வாய்ந்தவர்களுக்கு, மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தின் உரிய மரியாதையை வழங்கியதற்காக பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்" எனப் பதிவிட்டுள்ளார்.

  • Grateful thanks to Hon'ble Prime Minister Shri @narendramodi ji for bestowing the well deserving honor of Presidential nomination as Rajya Sabha members on extremely deserving Stalwarts from the film Industry Shri.K.V.Vijayendra Prasad garu & Shri Ilaiyaraaja garu.

    — Chiranjeevi Konidela (@KChiruTweets) July 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தொடர்ந்து, மலையாள நடிகர் மோகன்லால், இளையாராஜா, பி.டி. உஷா ஆகியோருக்கு வாழ்த்து கூறி ட்வீட் செய்துள்ளார். மேலும், இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து பல்வேறு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.