பிக்பாஸ் சீசன் 6 ஃபைனலில் திடீர் ட்விஸ்ட்.. வெற்றிபெற்ற போட்டியாளர் யார்?; பரிசுத்தொகை தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 6 ஃபைனலில் திடீர் ட்விஸ்ட்.. வெற்றிபெற்ற போட்டியாளர் யார்?; பரிசுத்தொகை தெரியுமா?
தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வந்த பிக்பாஸ் தமிழ் 6ஆவது சீசனில், அசீம் வெற்றி பெற்றுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தி வரும், பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸின் ஆறாவது சீசனின் வெற்றியாளரை அறிவிக்கும் எபிசோட் நடைபெற்றது. இதில் வெற்றி பெறும் வெற்றியாளருக்கு பெரியதொகை பரிசாக வழங்கப்பட உள்ளது.
அதன்படி இறுதி கட்டத்தில் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் அசீம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த விக்ரமன் மற்றும் மாடலான திருநங்கை ஷிவின் ஆகியோர் போட்டியில் இருந்தனர். ஆன்லைன் மூலம் பொது மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தப் போட்டியில் அசீம் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு பிக்பாஸ் கோப்பையும், ரூ.50 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கப்பட்டது. சமூக வலைதளங்களில் பிக்பாஸ் ரசிகர்கள் அசீம் வெற்றி பெற்ற புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர். இதற்கு ஒரு சிலர் ஆதரவும், ஒரு சிலர் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.
-
The Real Winner Of Makkal Nayagan!🏆🔥#BB6WinnerAzeem #Azeem #BiggBossTamil6 #MakkalNayaganAzeem #AzeemArmy pic.twitter.com/0ynidP2mdQ
— MD_zainul_ (@MD_Zainul_) January 22, 2023
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் இறுதி சுற்றில் உள்ள போட்டியாளரான, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த விக்ரமனுக்கு வாக்களிக்குமாறு, அக்கட்சியின் தலைவரான திருமாவளவன் பதிவிட்ட ட்விட்டர் பதிவு பல்வேறு தரப்பிலும் விவாதப் பொருளானது. இதற்குப் பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியீடு!
