'யானை' வெற்றியையடுத்து அருண் விஜய்யை வாழ்த்திய கார்த்தி!

author img

By

Published : Jul 1, 2022, 10:34 PM IST

’யானை’ வெற்றியையடுத்து அருண் விஜய்யை வாழ்த்திய கார்த்தி..!

நடிகர் அருண் விஜய் நடித்து வெளியாகியுள்ள யானை படத்தின் வெற்றிக்கு நடிகர் கார்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ’யானை’. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று(ஜூலை 1) உலகெங்குமுள்ள திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் வெற்றிக்கு நடிகர் கார்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “யானை படம் தொடர்பாக நேர்மறையான விமர்சனங்கள் வருவதைக் கேட்டறிந்தேன். ஹரியுடன் நீங்கள் சேர்ந்து பணியாற்ற நீங்கள் நீண்ட நாட்கள் காத்திருந்தது தற்போது நடந்துள்ளது. எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மொத்த படக்குழுவினர்களுக்கும் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

  • Dear @arunvijay Hearing positive reviews about #Yaanai. Your collaboration with Hari sir was long overdue and am so happy it happened now. Best wishes to the whole team.

    — Actor Karthi (@Karthi_Offl) July 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: வெளியானது "பத்தல...பத்தல.." பாடல் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.