ஜீ5 OTT தளத்தில் ’ஆர்ஆர்ஆர்’!

ஜீ5 OTT தளத்தில் ’ஆர்ஆர்ஆர்’!
ஜீ5 ஓடிடி தளத்தில் ஆர்ஆர்ஆர் மே20ஆம் தேதி வெளியாகிறது.
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் பிரபல நட்சத்திரங்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இணைந்து நடித்து இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு உலகம் முழுதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது ஆர்ஆர்ஆர் திரைப்படம்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தத் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்புகளைப் பெற்று பாக்ஸ் ஆபிசில் அதிக வசூலைக் குவித்தது. இந்நிலையில் படத்தின் தயாரிபாளர் இந்தத் திரைப்படம் எப்போது ஒடிடி தளத்தில் வெளிவரும் என அறிவிக்காத நிலையில், ஒடிடி தளமான ஜீ5 இல் மே 20 ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.
இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ஆர்ஆர் தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒடிடி தளமான ஜீ 5 இல் வெளியாகும் என்றும் இந்தியில் சிறிது நாள்களுக்குப் பிறகு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த வெற்றிப்படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஒலிவியா மோரிஸ், ஸ்ரேயா சரண், ஆகிய நடிகர்களும் நடித்துள்ளனர். பெரிய பட்ஜட்டில் வெளியான இந்தப் படத்தின் தயாரிபாளர் டிவிவி தனய்யா ஆவார். இப்படத்தின் இசையமைப்பாளர் எம் எம் கீரவானி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’ஆர். ஆர். ஆர்.’ படத்தில் அதிரடி கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆர்.!
