சிகிச்சையில்லாத நோயால் பாதிக்கப்பட்ட பிரபல ஹாலிவுட் நடிகர்.. உலகம் முழுவதும் ரசிகர்கள் சோகம்..

author img

By

Published : Feb 17, 2023, 3:28 PM IST

Updated : Mar 14, 2023, 7:30 PM IST

சிகிச்சையளிக்க முடியாத நோயால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் புரூஸ் வில்லிஸ்

பிரபல ஹாலிவுட் நடிகர் புரூஸ் வில்லிஸ், ஃப்ரண்டோடெம்போரல் டிமென்ஷியா என்னும் அறிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நியூயார்க்: ஹாலிவுட் திரையுலகில் "டை ஹார்ட்" படம் மூலம் மாபெரும் வரவேற்பை பெற்ற நடிகர் புரூஸ் வில்லிஸ். 67 வயதான நிலையிலும் பல்வேறு படங்களில் நடத்து வந்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனிடையே சிகிச்சையளிக்க முடியாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவரது உடல்நிலை மோசமாகியதாகவும், மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் ஊடகங்களுக்கு நேற்று (பிப். 17) விளக்கம் அளித்துள்ளனர். அதில், புரூஸ் வில்லிஸூக்கு ஃப்ரண்டோடெம்போரல் டிமென்ஷியா என்னும் அறிய வகை நோய் இருப்பது கடந்தாண்டு கண்டறியப்பட்டது.

இது எங்களை மிகவும் வேதனைப்படுத்தியது. ஏனென்றால், இந்த ஃப்ரண்டோடெம்போரல் டிமென்ஷியா நோய்க்கு சிகிச்சைகள் கிடையாது. இந்த நோயின் அறிகுறிகள் தோன்றிய பிறகு பாதிக்கப்பட்டவரின் ஆயுட்காலம் 7 முதல் 13 ஆண்டுகள் மட்டுமே இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நோய்க்கான சிகிச்சையளிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். இவரது உடல்நிலை குறித்து ஊடகங்களில் வெளியாகும் தவறான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் புரூஸ் வில்லிஸ், 40 ஆண்டுகளாக ஹாலிவுட் திரையுலகின் முக்கிய நடிகராக வலம் வந்தவர். டை ஹார்ட், புரூஸ் தி வெர்டிக்ட், பிளைண்ட் டேட், பல்ப் ஃபிக்ஷன், தி ஃபிஃப்த் எலிமென்ட், ஜிஐ ஜோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்த செய்தியால் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஹாலிவுட்டின் முக்கிய நடிகர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆங்கர் டூ ஆக்டர்.. டைமிங் காமெடி கில்லாடி.. நம்ம வீட்டு பிள்ளைக்கு இன்று பிறந்தநாள்

Last Updated :Mar 14, 2023, 7:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.