ETV Bharat / crime

நகைகளை உருக்க நவீன மெஷின்...வங்கி கொள்ளை கும்பலின் சிசிடிவி பதிவு...

author img

By

Published : Aug 24, 2022, 2:32 PM IST

அரும்பாக்கத்தில் உள்ள நகைக்கடன் வங்கியில் 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளை அடித்த கும்பல் பல்லாவரம் லாட்ஜில் வைத்து நகைகளை உருக்க நவீன மெஷினை எடுத்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

நகைகளை உருக்க நவீன மெஷின்...வங்கி கொள்ளை கும்பலின் சிசிடிவி பதிவு...
நகைகளை உருக்க நவீன மெஷின்...வங்கி கொள்ளை கும்பலின் சிசிடிவி பதிவு...

சென்னை: அரும்பாக்கத்தில் உள்ள ஃபெட் நகைக்கடன் வங்கியில் கடந்த 13ஆம் தேதி 31.7 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வங்கியில் பணியாற்றிய ஊழியர் முருகனே தனது கூட்டாளியுடன் திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு முக்கிய கொள்ளையனான முருகன், சூர்யா, சந்தோஷ், பாலாஜி, செந்தில்குமரன், நகை வியாபாரியான கோயம்புத்தூரை சேர்ந்த ஸ்ரீவத்சவா, அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ், கேப்ரியல் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 31.7 கிலோ தங்க நகைகள் முழுவதுமாக மீட்கப்பட்டது. மேலும் அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

நகைகளை உருக்க நவீன மெஷின்...வங்கி கொள்ளை கும்பலின் சிசிடிவி பதிவு...

இந்த நிலையில் ஃபெட் வங்கியில் நகைகளை கொள்ளையடித்துவிட்டு பல்லாவரத்தில் உள்ள லாட்ஜிற்கு நகைகளை கொண்டு சென்று அங்கு நகை உருக்கும் மெஷின் மூலமாக நகைகளை உருக்கி பையில் கொண்டு செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. குறிப்பாக நகைகளை கொள்ளையடிக்கும் முன்னதாகவே கோயம்புத்தூர் நகை வியாபாரியான ஸ்ரீவத்சவா நகை உருக்கும் மெஷினை லாட்ஜிற்கு கொண்டு செல்லும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது.

நகைகளை உருக்க நவீன மெஷின்...வங்கி கொள்ளை கும்பலின் சிசிடிவி பதிவு...
நகைகளை உருக்க நவீன மெஷின்...வங்கி கொள்ளை கும்பலின் சிசிடிவி பதிவு...

அதன் பிறகு லாட்ஜில் மெஷின் மூலமாக 1.5 கிலோ நகையை உருக்கும் போது அதிக புகை வெளியேறியதால் உடனடியாக உருக்கிய நகையை பையில் போட்டு ஸ்ரீவத்சவா காரில் தப்பிச்செல்லும் காட்சிகளும் பதிவாகி உள்ளது. அரும்பாக்கம் கொள்ளை வழக்கில் அடுத்தடுத்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

நகைகளை உருக்க நவீன மெஷின்...வங்கி கொள்ளை கும்பலின் சிசிடிவி பதிவு...
நகைகளை உருக்க நவீன மெஷின்...வங்கி கொள்ளை கும்பலின் சிசிடிவி பதிவு...

இதையும் படிங்க: போலீஸ் போல் நடித்து ரூ.24 லட்சம் கொள்ளை...தொடர் திருட்டில் ஈடுபட்டது அம்பலம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.