ETV Bharat / city

உயர்மின் அழுத்தக் கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிப்பு

author img

By

Published : Aug 16, 2022, 11:12 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் , சேவூரில் எதிர்பாராத விதமாக ரயில் இயங்கத் தேவைப்படும் உயர்மின் அழுத்தக் கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Rail traffic affected due to high voltage wire tripping
Rail traffic affected due to high voltage wire tripping

வேலூர்: சென்னையில் இருந்து கோவை செல்லும் இன்டர்சிட்டி பயணிகள் விரைவு ரயில் வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த திருவண்ணாமலை மாவட்டத்தினுள் வரும் சேவூர் அருகே செல்லும்போது (மாலை 4.30 மணியளவில்) எதிர்பாராத விதமாக ரயில் இயங்கத் தேவைபடும் உயர்மின் அழுத்தக்கம்பி திடீரென அறுந்து விழுந்துள்ளது.

மின்சாரம் தானாக துண்டிக்கப்பட்டதால் இரயில் சேவூரிலேயே நின்றது. இதில் பயணிகளுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்து தகவல் அறிந்த காட்பாடி சந்திப்பு ரயில் நிலையை மின் பொறியாளர்கள் 15 பேர் கொண்ட குழுவினர் டவர் வேகன் வண்டி மூலம் விரைந்து சென்று , அறுந்து கிடந்த மின் கம்பியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேரமாக நடைபெற்ற சீரமைப்புப்பணி மாலை 6 மணிக்கு மேல் சரி செய்யப்பட்டதை அடுத்து, இன்டர்சிட்டி ரயில் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதத்திற்குப் பின் இயக்கப்பட்டது.

சேவூர் பகுதியில் திடீரென இரயில்வே உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் இன்டர்சிட்டிக்கு பின்னால் இயக்கப்படும் திருவனந்தபுரம், லால் பாக், மங்களூர் விரைவு இரயில் ஆகியவை ஆங்காங்கே நடு வழியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

பழுது சரி செய்யப்பட்ட ஒன்றரை மணி நேரத்திற்குப்பிறகு அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டு போக்குவரத்து சீரானது. இதுபோன்ற விபத்து காலத்தில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் குறிப்பிட்ட தூரத்திற்கு ஓர் இடத்தில் மின் ரிப் வைக்கப்பட்டிருக்கும்.

இப்படியான சமயங்களில் தானாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு அசம்பாவிதங்கள் தடுக்கப்படும் வகையில் தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்மின் அழுத்தக் கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிப்பு

இதையும் படிங்க: திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு.. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.