’பணிக்கு வராத மருத்துவர்களுக்கு... பட்டையைக் கிளப்பி விடுவேன்...’ - துரைமுருகன் எச்சரிக்கை!

author img

By

Published : Sep 12, 2021, 7:40 AM IST

துரைமுருகன், துரைமுருகன் எச்சரிக்கை, duraimurugan angry, duraimurugan

மருத்துவமனையில் சரியாக பணிக்கு வராத அரசு மருத்துவர்களை பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பிவிடுவேன் என அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர்: பொன்னையில் கரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நேற்று (செப்.11) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.

பின்னர் கரோனா ஊரடங்கால் நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்‌. இதனையடுத்து, பேசிய அமைச்சர் துரைமுருகன், "கரோனா தொற்றால் பாதிக்கப்படாத ஆள்கள் தமிழ்நாட்டில் மிக குறைவு. எனக்குக்கூட கரோனா தொற்று ஏற்பட்டது.

வேலூர் பொன்னையில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு

மக்களைத் தேடி மருத்துவம்

நான் தடுப்பூசி போட்டுகொண்டதால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. ஆனால், இதையும் தாண்டி மூன்றாவது அலை வருவதாகக் கூறுகிறார்கள். அது எப்படி இருக்கும் என்று தெரியாது.

மக்களுக்கு நோய்கள் வராமல் தடுக்க அரசு மருத்துவ உதவிகளைச் செய்கிறது. ஆனால், நோய் வருபவர்களைத் தேடி மருத்துவர்கள் செல்லுவதற்குதான் திமுக ஆட்சியில், 'மக்களை தேடி மருத்துவம்' என்ற புதிய தத்துவத்தை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார்.

எனவே, கரோனா தடுப்பூசியை அனைவரும் போட்டுகொள்ள வேண்டும். பொன்னை பகுதியைப் பொறுத்தவரையில் இரண்டு விஷயங்களை சொன்னேன். ஒன்று, கல்லூரி. அதை இந்த ஆண்டு கொண்டு வருவேன். மருத்துவமனையை ஏற்படுத்திவிட்டேன். சொன்னதைச் செய்தவன் துரைமுருகன்.

’பட்டையைக் கிளப்பிவிடுவேன்’

இது மட்டும் இல்லாமல் நான் கட்டிய மேம்பாலம் 50 ஆண்டுகள் பழையதாகிவிட்டதால், பொன்னையில் புதியதாக மேம்பாலம் பெற்று தந்துள்ளேன். ஆட்சிக்கு வந்தவுடன் பொன்னைக்கு பல திட்டங்களை செய்துள்ளேன்.

பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சரியாக மருத்துவர்கள் பணிக்கு வருவதில்லை என குற்றச்சாட்டு உள்ளது. முறையாக பணி செய்யுங்கள் இல்லையென்றால் பட்டையைக் கிளப்பிவிடுவேன். இடமாற்றம் செய்யமாட்டேன், பணிநீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பிவிடுவேன். புகார் என்றால் என்னை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு கூறுங்கள்" என்றார்.

இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானமத்தை 13ஆம் தேதி முதலமைச்சர் கொண்டு வருவார்- அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.