பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல்-  அதிமுக முன்னாள் எம்பி ஆவேசம்

author img

By

Published : Jan 22, 2022, 9:16 PM IST

மால் பாதி மடக்கு மீதி

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா அலுவலகம் முன்பு திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப. குமார், “திமுக அரசை அகற்ற மக்கள் தயாராகிவருகிறார்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளது” என்று குற்றஞ்சாட்டினார்.

தமிழ்நாட்டில் பெரும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாயிகள் என திரளாக பங்கேற்று கண்டனத்தை தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப. குமார், ”கடந்த ஆட்சியில் லால்குடி பேரூராட்சிக்கு அனைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளோம்.

தற்போது அவசர கதியில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யவில்லை என்றால் பெயரளவில் மட்டுமே நகராட்சி இருக்கும். இந்த ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள் காரணம் பொங்கல் தொகுப்பில் ஏகப்பட்ட குளறுபடிகள், பொருட்களின் தரம் குறைவு என மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள்.

திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

இதேபோலத்தான் வரும் காலங்களில் இவர்களின் திட்டம் இருக்கும் என மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள். ஆகவே வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் எனவும் இந்த அரசை அகற்ற மக்கள் தயாராகி வருகிறார்கள். வருகின்ற நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.500 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றுள்ளது. இதனை கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸூம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்” என்றார்.

இதையும் படிங்க: bullfighting festival: மாங்குப்பம் எருதுவிடும் விழாவில் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.