”பொதுமக்கள் குறைகள் விரைந்து தீர்த்து வைக்கப்படும்” - கரூர் ஆட்சியர்!

author img

By

Published : Jun 16, 2021, 3:58 PM IST

karur new collector press meet

பொதுமக்களை அலைக்கழிப்பு செய்யாமல் அவர்களது குறைகள் விரைந்து தீர்த்து வைக்கப்படும் என கரூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

கரூர் : கரூர் மாவட்ட புதிய ஆட்சியராக பிரபுசங்கர் இன்று(ஜூன்.16) பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், "தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனான் பவர்க்கு" திருக்குறளில் அரசியல் என்ற் அதிகாரத்தில் திருவள்ளுவர் குறிப்பிடுவதைப் போல துணிவுடனும் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை, காலம் தாழ்த்தாமை என சிறப்பாக கரூர் மாவட்ட நிர்வாகம் செயல்படும்.

பொதுமக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்க முயற்சி மேற்கொள்வதுடன் பொதுமக்களை அலைக்கழிப்பு செய்யாமல் அவர்களது குறைகள் விரைந்து தீர்த்து வைக்கப்படும். மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த வளர்ச்சியை உருவாக்க வேளாண்மை, தொழில், கல்வி,சுகதாரம், அரசு நலத்திட்டங்கள் ஆகியவற்றை அனைவருக்குமான வளர்ச்சியை உள்ளடக்கி நடவடிக்கை மேற்கொள்வேன்.

கரூர் ஆட்சியர் செய்தியாளார் சந்திப்பு

கரோனா இரண்டாம் அலையை கட்டுபடுத்த சிறப்பாக செயலாற்றி கரூர் மாவட்டத்தில் உள்ள அலுவலர்கள் செயல்பட்டதால் தற்பொழுது தொற்று குறையத் தொடங்கியுள்ளது.மேலும் கட்டுபாடுகளை தீவிரப்படுத்தி மாவட்டம் முழுவதும் தொற்று எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அனைவருக்கும் தடுப்பூசிபோட நடவடிக்கை - ஈரோடு மாவட்ட ஆட்சியர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.