வட்டி கட்ட தவறிய தனியார் பள்ளி நிறுவனம் - அத்துமீறிய நிதி நிறுவன அலுவலர்கள்

author img

By

Published : Sep 1, 2021, 11:50 AM IST

அத்துமீறிய நிதி நிறுவன அலுவலர்கள்

திருப்பூரில் இயங்கி வரும் தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் நிதி நிறுவனத்திடம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட தவறியதால், நிதி நிறுவன அலுவலர்கள் பள்ளி ஊழியர்களை தாக்கியுள்ளனர்.

திருப்பூர்: பல்லடத்தை அடுத்த சின்னக்கரையில், பார்க் அறக்கட்டளைக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலத்தில், பார்க் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பார்க் மெட்ரிக்குலேசன் பள்ளி செயல்படுகிறது. ஆனால், சில மாதங்களாக கரோனா தொற்று காரணமாக அந்த பள்ளி, கல்லூரி மூடப்பட்டன.

அறக்கட்டளையின் நிர்வாகிகளாக மறைந்த மருத்துவர். பிரேமா ரவி, அவரது கணவர் ரவி, மகன், மகள் உள்பட நான்கு பேர் உள்ளனர். இவர்கள், கடந்த 2017ஆம் ஆண்டு பார்க் அறக்கட்டளைக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை திருப்பூரைச் சேர்ந்த ஸ்ரீவாரி நிதி நிறுவனத்திடம் அடமானம் வைத்து கிரயம் செய்து கடன் வாங்கியதாக தெரிகிறது.

பணம் பெற்ற பிறகு சில மாதங்கள் வட்டி தொகையை தவறாமல் செலுத்தி வந்த நிலையில் ஊரடங்கால் பள்ளி, கல்லூரி மூடப்பட்டதன் காரணமாக அறக்கட்டளையினால் உரிய காலத்தில் வட்டியை செலுத்த முடியவில்லை. இதனை தொடர்ந்து தனியார் நிதி நிறுவனத்தினர், நிலத்தினை வழங்குமாறு அறக்கட்டளை நிர்வாகத்தினரை கேட்டு வந்துள்ளனர். ஆனால், இதற்கு அறக்கட்டளை நிர்வாகத்தினர் மறுப்பு தெரிவித்த நிலையில் இரு தரப்பினரும் திருப்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

திமுக பிரமுகர் மீது புகார்

இந்நிலையில் நிதி நிறுவனத்திற்கு ஆதரவாக திமுக பிரமுகர் செங்கப்பள்ளி சுப்ரமணியம் என்பவர் செயல்பட்டு வருவதாகவும், அவரது தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து, ஊழியர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததோடு பூட்டை உடைத்து, நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

அத்துமீறிய நிதி நிறுவன அலுவலர்கள்

இது குறித்து அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கல்லூரிக்கு வந்த நிர்வாகிகள் காயமடைந்த ஊழியர்களை பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இது குறித்து நிர்வாகிகளில் ஒருவரான கார்த்திக் பல்லடம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துளார்.

காவல் துறையினர் கல்லூரி கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் இரு தரப்பினரிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மக்கள் விரோத ஸ்டாலின் ஒழிக - திருநெல்வேலியில் அதிமுகவினர் சாலை மறியல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.