குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

author img

By

Published : Oct 2, 2022, 6:11 PM IST

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தூத்துக்குடியில் குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி: மகாத்மா காந்தியின் பிறந்த நாளினை முன்னிட்டு தூத்துக்குடி வ.உ.சி சாலையில் உள்ள பழைய மாநகராட்சி அலுவலக வாயிலில் உள்ள காந்தி திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், கதர் விற்பனை நிலையத்தில் காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு பூத்தூவி மரியாதை செலுத்தி, கதர் சிறப்பு விற்பனையைத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், 'தமிழ்நாடு அரசு மூலமாக கதர் சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தேன். இன்று முதல் 30% தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. காதி கிராப்ட் நிலையமானது, தூத்துக்குடி, கோவில்பட்டி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.

சென்ற ஆண்டு மட்டும் 50 லட்சம் ரூபாய்க்கு கதர் விற்பனையும், கிராமப் பொருட்களான சோப்பு, ஆயில் போன்ற மற்ற பொருட்கள் 52 லட்சம் ரூபாய்க்கு மேலும் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய்க்கும் மேல் விற்பனை நடந்தது.

கடந்த ஆண்டு 80 லட்சம் ரூபாய்க்கு இலக்கு வைத்ததுபோல் இந்த ஆண்டு 90 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய இலக்கு வைத்திருக்கிறோம். மேலும், இந்த நிலையத்தில் கதர் ஆடைகள், கதர் நூல் புடவை மட்டுமில்லாமல் பாரம்பரிய அரிசியான மாப்பிள்ளைச் சம்பா, சீரகச்சம்பா ஆகிய அரிசிகள் விற்பனையில் உள்ளன. நேச்சுரல் பொருட்களை உபயோகிக்க வேண்டும்.

பாலித்தீன், பிளாஸ்டிக் பொருட்களை நாம் உபயோகிக்காத வண்ணம், கதர் ஆடைகள் உபயோகித்தால் எதிர் கால, சமுதாயம் நன்றாக இருக்கும். ஆகவே, கதர் ஆடைகளை பயன்படுத்துங்கள்’ எனக் கேட்டுக்கொண்டார்.

குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

குலசை முத்தாரம்மன் கோயில் தசரா விழா குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு? 'மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் 1,150-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

48 இடங்களில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு பொருத்தப்பட்டு உள்ளது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வதால் குலசை முத்தாரம்மன் கோயில் அருகே தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. தசரா குழுவினர் ஆபாச நடனங்களை ஆடக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.

இதையும் படிங்க: காந்தி கோயிலில் அபிஷேக ஆராதனை - குமரி அனந்தன் பங்கேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.