விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை - இந்து முன்னணியினர் நூதனப் போராட்டம்

author img

By

Published : Sep 2, 2021, 5:40 PM IST

இந்து முன்னணியினர் நூதன போராட்டம்

தூத்துக்குடி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு விதித்துள்ள தடையை ரத்து செய்ய வலியுறுத்தி இந்து முன்னணியினர் நூதனப் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி: விநாயகர் சதுர்த்தி விழாவின்போது தமிழ்நாடு முழுவதும் மிக பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மூன்று நாள்கள் வழிபாடு நடைபெறும்.

பின்னர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல் மற்றும் ஆறு, குளங்களில் கரைப்பது வழக்கமாக இருந்து வந்தது.

இந்தாண்டு கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அரசு தடை விதித்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை

இந்நிலையில் அரசின் இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டி தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சிலைகளிடம் இந்து முன்னணியினர் மனு கொடுத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி சிவன் கோயிலில் உள்ள விநாயகர் சிலையிடம் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் ராகவேந்திரா தலைமையில் தொண்டர்கள் மனு அளித்து முறையீடு செய்தனர்.

டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி

இந்து முன்னணியினர் நூதனப் போராட்டம்

இது குறித்து செய்தியாளர்களிடம் ராகவேந்திரா பேசுகையில், "கரோனா ஊரடங்கில் டாஸ்மாக் கடைகளை காவல் துறையினர் பாதுகாப்புடன் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆனால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை நடத்துவதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதர மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை நடத்துவதற்கு அம்மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன" என்றார்.

திருப்பூர்: மாநகராட்சி அருகே உள்ள விநாயகர் கோயிலில் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நூதனப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கு தடை விதித்த அரசை கண்டித்து பெண்கள் மண்ணை வாரி தூற்றி முழக்கங்களை எழுப்பினர்.

மண்ணை வாரி தூற்றி முழக்கங்கள்

இந்து முன்னணியினர் நூதனப் போராட்டம்

மேலும் திருப்பூர் மாநகராட்சிக்குள்பட்ட டவுன்ஹால், புஷ்பா ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் இந்து முன்னணியினர் கையில் விநாயகர் சிலைகளை வைத்தும் , விநாயகர் வேடமணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: விநாயகர் சிலைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட 177 பேர் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.