சேலத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு!

author img

By

Published : Sep 9, 2022, 9:53 PM IST

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

சேலத்தில் நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு இன்று(செப்.09) பாராட்டு விழா நடைபெற்றது.

சேலம்: மருத்துவப்படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 19 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் சேலம் குரங்குசாவடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 175 மாணவ - மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் இந்த பள்ளியைச்சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வில் 685 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் 101-ஆவது இட தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்று சாதனைப்படைத்துள்ளார். தொடர்ந்து இரண்டாவது இடம், மூன்றாவது இடம் என பள்ளியைச்சேர்ந்த மாணவ மாணவிகளே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் இதனைக்கொண்டாடும் விதமாக இன்று(செப்.09) தனியார் பள்ளியில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை கெளரவிக்கும் விதமாக மாணவ மாணவிகளின் குடும்பத்தாருடன் கேக் வெட்டி, ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை பரிமாறிக்கொண்டாடினர்.

தொடர்ந்து மாணவிகளின் பெற்றோருக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக கொண்டாடினர். மேலும் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அனைவரையும் பள்ளி நிர்வாகத்தினர் பூங்கொத்து கொடுத்து சால்வை போர்த்தி கௌரவப்படுத்தினர்.

இதையும் படிங்க: குரூப் 1 தேர்வு தள்ளிவைப்பு - TNPSC அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.