Cylinder Blast: சிலிண்டர் வெடித்து விபத்து: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

author img

By

Published : Nov 23, 2021, 12:29 PM IST

மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

சேலத்தில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் (Cylinder Blast) வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. விபத்து நடந்த இடத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வுசெய்தார்.

சேலம்: கருங்கல்பட்டி பகுதியில் சிலிண்டர் வெடித்து (Cylinder Blast) ஏற்பட்ட விபத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து சேதமாயின. இதனால் கட்டட இடிபாடுகளில் சிக்கி ராஜலட்சுமி (80) என்பவர் உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

விபத்து ஏற்பட்ட இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பின்னர் செய்தியாளரிடம் பேசுகையில், “சமையல் எரிவாயு உருளை வெடித்த விபத்தில் காயமடைந்த 11 பேரில் 90 விழுக்காடு தீக்காயங்களுடன் கோபி என்பவர் சேலம் அரசு மருத்துமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை, தொடர்ந்து அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

மாவட்ட ஆட்சியர்

மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க ஏற்கனவே 55 பேர் ஈடுபட்டுவரும் நிலையில் அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் (National Disaster Rescue Team) வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கீழ் வீட்டில் காலையில் சமையல் செய்ய அடுப்பை பற்றவைத்தபோது சிலிண்டர் வெடித்தது தெரியவந்துள்ளது" என்றார்.

மாவட்ட ஆட்சியர்

இதையும் படிங்க: Velacherry Accident CCTV: பேருந்து மோதி பெண் உயிரிழப்பு - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.