’2021-இல் உள்ளாட்சி; 2026-இல் நல்லாட்சி’ - விஜய் ரசிகர்கள் சுவரொட்டியால் பரபரப்பு!

author img

By

Published : Sep 25, 2021, 10:14 PM IST

விஜய் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டிகள் தொடர்பான காணொலி

'2021இல் உள்ளாட்சி; 2026இல் நல்லாட்சி இதுதான் நம்ம சர்கார்' என விஜய் ரசிகர்கள் மதுரை மாநகர் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை: தமிழ் திரைப்பட உலகின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். தற்போது தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில், விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடவுள்ளதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள், விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து மாநகர் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

அரசியல் பிரவேச வாசகங்களால் பரபரப்பு

அதில், “2024இல் முதல் மாநாடு, 2026இல் முதலமைச்சராக களம் காண தயாராகுங்கள் தளபதி சொந்தங்களே” என்றும், ”2021இல் உள்ளாட்சி, 2026இல் நல்லாட்சி” என்பன போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இது போன்ற நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த சுவரொட்டி வாசகங்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ ட்ரெய்லர் வெளியானது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.