ஜல்லிக்கட்டு; 'ஏலேய்... கிட்டி போடாத, மாட பிடி.. பரிச வாங்கு!

author img

By

Published : Jan 13, 2022, 12:04 PM IST

Updated : Jan 13, 2022, 2:07 PM IST

ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டத்தில் மிகக் கோலாகலமாக ஜல்லிக்கட்டு திருவிழா நாளை (ஜன.14) அவனியாபுரத்திலிருந்து தொடங்குகிறது. நாளை மறுநாள் (ஜன.15) பாலமேட்டிலும், திங்கள்கிழமை (ஜன.17) அலங்காநல்லூரிலும் நடைபெறவுள்ள நிலையில், வாடிவாசல், கம்புத் தடுப்புகள், பார்வையாளர் கேலரிகள் அமைக்கும் பணிகள் ஏறக்குறைய முடிவுற்றுள்ளன.

மதுரை : 'ஏய்... வாடிவாசல மறச்சிகிட்டு நிக்காதீங்கய்யா..', 'ஏலேய்... கிட்டி போடாத... வெளியேத்த வேண்டியிருக்கும்...', 'ஏய்... மாடு பிடி மாடுப்பா... வீரன பரிசு வாங்கிட்டு போகச் சொல்லுய்யா..' 'இந்தா வருது பாரு... பாலமேடு கருப்பு காளை... முடிஞ்சவன் புடிச்சுக்கோ... பரிசுகள அள்ளிக்கோ..' 'வால பிடிக்காத... கொம்ப பிடிக்காத...' இதுபோன்ற குரல் அடுத்த மூன்று நாள்களில் உலகத் தமிழர்களின் வீடுகளில் எதிரொலிக்கும்.

மதுரை மாவட்டத்தில் மிகக் கோலாகலமாக ஜல்லிக்கட்டு திருவிழா நாளை (ஜன.14) அவனியாபுரத்திலிருந்து தொடங்குகிறது. நாளை மறுநாள் (ஜன.15) பாலமேட்டிலும், திங்கள்கிழமை (ஜன.17) அலங்காநல்லூரிலும் நடைபெறவுள்ள நிலையில், வாடிவாசல், கம்புத் தடுப்புகள், பார்வையாளர் கேலரிகள் அமைக்கும் பணிகள் ஏறக்குறைய முடிவுற்றுள்ளன.
கரோனா தொற்று காரணமாக தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு போட்டியிலும் 700 காளைகள், 300 வீரர்களும் பங்கேற்கலாம். காளைகளும், வீரர்களும் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும். 150 உள்ளூர் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. போட்டியில் பங்கேற்கும் வீரர்களும், காளை மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பதுடன், ஆர்டிபிசிஆர் பரிசோதனையும் செய்திருக்க வேண்டும்.

அதுமட்டுமன்றி, ஜனவரி 11ஆம் தேதி மாலை 5 மணிக்குத் தொடங்கி, 12-ஆம் தேதி மாலை 5 மணி வரை நிலவரப்படி 4 ஆயிரத்து 544 காளைகளும், 2001 வீரர்களும் தங்களை இணைய வழியாக பதிவு செய்துள்ளனர். மேற்படி பதிவு செய்துள்ள விபரங்கள், சான்றுகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவதால், இன்று மாலைக்குள் போட்டியில் பங்கேற்கும் தகுதியுள்ள வீரர்கள் மற்றும் காளைகளின் பட்டியல் வெளியாகும் என மதுரை மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் சிறந்த காளைகளுக்கு மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பாக 20 சலவை இயந்திரங்கள், 20 பீரோக்கள், 100 தங்கக்காசுகள் உள்பட சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் வழங்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : புதுக்கோட்டை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த காளைகள்!

Last Updated :Jan 13, 2022, 2:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.