குறைந்த செலவில் சிஎன்சி இயந்திரம் உருவாக்கி மாணவர் சாதனை

author img

By

Published : Aug 28, 2021, 10:40 PM IST

மாணவர் உருவாக்கிய சிஎன்சி இயந்திரம்

கணினி மூலம் இயங்கும் குறைந்த செலவிலான சிஎன்சி இயந்திரத்தை உருவாக்கிய கல்லூரி மாணவரின் கண்டுபிடிப்பு ஆசியா, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றுள்ளது.

ஈரோடு: தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் சிஎன்சி இயந்திரங்கள் பெரிய தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இதன் விலை பல லட்சங்களாக இருக்கும். சிறு தொழில் நிறுவனங்கள் சிஎன்சி இயந்திரத்தை கொள்முதல் செய்யமுடியாத நிலை ஏற்பட்டதால் கணினியால் இயக்கப்படும் சிஎன்சி இயந்திரத்தை குறைந்த செலவில் தயாரிக்கும் தொழில்நுட்பகத்தை பண்ணாரிஅம்மன் தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் மாணவர் டி.ரஜித்கர்னா கண்டுபிடித்துள்ளார்.

சாதனை படைத்த மாணவர்
சாதனை படைத்த மாணவர்

மாவு அரைக்கும் இயந்திரம், மேஜை துளையிடும் கருவி ஆகியவற்றை கொண்டு சிஎன்சி இயந்திரத்தின் செயல்பாடுகளான திருப்புதல், துளையிடுதல், திருகுதல் ஆகியவற்றை மிகக் துல்லியமாக உருவாக்கியுள்ளார். கணினி கட்டுப்பாட்டில் இயங்கும் இவ்வியந்திரம் இமேஜ் பிராஸஸிங்க் தொழிநுட்பத்தை அடிப்படையாக இயந்திர மாதிரிகளை உருவாக்கும் திறன் உடையது.

மாணவர் உருவாக்கிய சிஎன்சி இயந்திரம்
மாணவர் உருவாக்கிய சிஎன்சி இயந்திரம்

இந்த சிஎன்சி இயந்திரம் சர்வதேச இம்டெக்ஸ் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதால் ஆசியா, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம் பெற்றதுள்ளது. சாதனை படைத்த மாணவரை கல்லூரித் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், கல்லூரி ஆலோசகர் விஜயகுமார் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.

இதையும் படிங்க: 800 உலக நடனக் கலைஞர்கள் ஆன்லைனில் நிகழ்த்திய கின்னஸ் சாதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.