பெருங்களத்தூர் மேம்பால பணிகள்...காலதாமதம் ஏன்?

author img

By

Published : Sep 23, 2022, 1:12 PM IST

Updated : Sep 23, 2022, 5:13 PM IST

நெடுஞ்சாலை துறை அலுவலர் விளக்கம்

பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரு வழி மேம்பாலம் மட்டும் திறக்கப்பட்ட நிலையில் மற்ற மேம்பாலங்கள் திறக்கப்படாமல் உள்ளது. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

சென்னை: மாநகரின் நுழைவு வாயிலாக திகழும் பெருங்களத்தூரில் பல வருடங்கள் போக்குவரத்து நெரிசல் என்பது நிரந்தரமாக இருந்து வருகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தையும் ஏற்படுத்தி வருகிறது. பெருங்களத்தூர் பகுதியில் பண்டிகை காலங்களில் பெரும் அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரம் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

எப்போது முடியும் பெருங்களத்தூர் மேம்பாலம் பணிகள்?
எப்போது முடியும் பெருங்களத்தூர் மேம்பாலம் பணிகள்?

அதேபோல் பெருங்களத்தூர் ரயில் நிலையம் கிராசிங் பகுதியில் மேம்பாலங்கள் இல்லாததால் பல மணி நேரம் வாகன ஓட்டிகள் காத்திருந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளன. இதனால் அப்பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஒரு வழி மேம்பாலம்: இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பெருங்களத்தூரில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்து வந்த நிலையில் பெருங்களத்தூரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மேம்பால திட்டத்தை கொண்டு வந்தனர்.

எப்போது முடியும் பெருங்களத்தூர் மேம்பாலம் பணிகள்?
எப்போது முடியும் பெருங்களத்தூர் மேம்பாலம் பணிகள்?

கடந்த 2020 ஆம் ஆண்டு 234 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேம்பாலங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் பெருங்களத்தூர் சீனிவாசா நகரில் இருந்து ரயில்வே கிராஸிங் மேம்பாலமும், பெருங்களத்தூரில் இருந்து நெடுங்குன்றம் மார்கமாக மேம்பாலமும், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்க்கமாக ஒரு மேம்பாலமும் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.

எப்போது முடியும் பெருங்களத்தூர் மேம்பாலம் பணிகள்?
எப்போது முடியும் பெருங்களத்தூர் மேம்பாலம் பணிகள்?

அதன் பின் கரோனா மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகளால் மேம்பாலம் கட்டும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில் செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் மார்க்கமாக செல்லும் மேம்பால பணிகள் விரைவாக கட்டப்பட்டு திறக்கப்பட்டது.

பெருங்களத்தூரில் ஒரு வழி மேம்பாலம் திறக்கப்பட்ட போதிலும் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் ஒழிக்க முடியாது எனவும், பெருங்களத்தூர் ரயில்வே தண்டவாளத்திற்கு மேல் கட்டப்படும் மேம்பாலமும்,நெடுங்குன்றம் மார்கமாக கட்டப்படும் மேம்பாலம் விரைவாக கட்டப்பட்ட வேண்டும்.

பொதுமக்கள் கோரிக்கை: தமிழ்நாட்டில் எந்த ஆட்சியாக இருந்தாலும் குறிப்பிட்ட தேதியில் மேம்பால பணிகள் கட்டப்பட்டு குறிப்பிட்ட தேதியில் திறக்கப்பட்டதாக வரலாறு கிடையாது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பெருங்களத்தூர் மேம்பால பணிகள்...காலதாமதம் ஏன்?

எனவே காலதாமதம் செய்யாமல் கிடப்பில் உள்ள அனைத்து பணிகளையும் முடித்து விரைவில் பொதுமக்கள் பயன்பாடிற்க்கு மேம்பாலங்களை கொண்டு வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பெருங்களத்தூரில் ஒரு வழி மேம்பால பணிகள் மட்டும் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வந்த நிலையில் மற்ற இரண்டு பாலப்பணிகளும் நடைபெறாமல் உள்ளது. அதேபோல் சாம்பார் தூள் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக மேம்பால பணி தொடங்கப்படாமல் உள்ளது.

இது குறித்து நெடுஞ்சாலை துறை அலுவலர் ஒருவரிடன் கேட்டபோது அவர் நம்மிடம் கூறியதாவது,

“தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக மேம்பாலம் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் நிதி கொடுக்கப்பட்டு பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு மேம்பாலம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

விரைவில் பணிகள் முடிவு: தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக புதிதாக கட்டப்படும் மேம்பால பணிகள் 6 மாதத்தில் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

பெருங்களத்தூர் சீனிவாசா நகரில் இருந்து ரயில்வே தண்டவாளத்திற்கு மேல் கட்டப்படும் மேம்பால பணிகளுக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் மாத இறுதிக்குள் பெருங்களத்தூர் ரயில்வே தண்டவாளத்தின் மேல் கட்டப்படும் மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பயன்படும் கொண்டுவரப்பட உள்ளது.

அதேபோல் பெருங்களத்தூரில் இருந்து நெடுங்குன்றம் மார்கமாக கட்டப்படும் மேம்பால பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.

வனத்துறைக்கு சொந்தமான இடங்கள் இருப்பதால் வனத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த மேம்பாலம் பணியும், தாம்பரம் செங்கல்பட்டு மார்கமாக கட்டப்படும் மேம்பாலம் பணிகளும் ஒன்றாக முடிக்கப்பட்டு அடுத்த 6 மாத காலத்தில் திறக்கப்பட உள்ளது”, என நெடுஞ்சாலை துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'ஒரு காலத்தில் சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையன்; இன்று நான் காந்தியவாதி' - பகதூர் சிங்

Last Updated :Sep 23, 2022, 5:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.