ETV Bharat / city

காற்றில் பறந்த பெண்ணின் சான்றிதழ்: கல்லூரி வாசலில் தர்ணா!

author img

By

Published : Jul 28, 2021, 6:11 AM IST

மதுரவாயலில் கல்வி சான்றிதழ் வழங்கக்கோரி தனியார் கல்லூரி வாசலின் முன் அமர்ந்து பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பவித்ரா போராட்டம்
பவித்ரா போராட்டம்

சென்னை: மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியின் முன்னாள் மாணவியான பூந்தமல்லியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணுக்கு கடந்த இரண்டு வருடமாக படிப்பதற்காக கொடுத்த சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகம் தராமலும், சான்றிதழ்கள் தொலைந்து விட்டதாகவும் கூறிவருகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட பெண் கல்லூரி வாசலின் முன் அமர்ந்து சான்றிதழ் வழங்கக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து தகவல் அறிந்த கோயம்பேடு உதவி ஆணையர் ரமேஷ்பாபு, மதுரவாயல் காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும், இதுகுறித்து புகார் அளித்தால் சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து, அந்த பெண் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

பவித்ரா போராட்டம்

இது குறித்து பவித்ரா கூறும்போது, "நான் இந்த கல்லூரியில் பி.எட். பட்டப்படிப்பு படித்து முடித்தேன். அப்போது 10 மற்றும் 12ஆம் வகுப்பு சான்றிதழ்களை கொடுத்த நிலையில், மேற்படிப்பும் இதே கல்லூரியில் படித்து முடித்தேன்.

மேற்படிப்பு படித்து முடித்ததற்கான சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகம் வழங்கிய நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பி.எட். சான்றிதழ்களை இதுவரை வழங்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது சான்றிதழ் தொலைந்து விட்டதாக கல்லூரி நிர்வாகம் கூறுகிறது.

பவித்ரா போராட்டம்

மாற்று சான்றிதழ் வாங்கி கொள்ள கடிதம் கேட்டாலும் கல்லூரி நிர்வாகம் கொடுக்கவில்லை. சான்றிதழ்களை வாங்க சுமார் இரண்டு ஆண்டுகள் அலைந்து வருகிறேன்" என்றார் வேதனையுடன்.

கல்லூரி வாசல் முன்பு இளம்பெண் போராட்டம் நடத்தியது அப்பகுதியில் சிறிது நேர பரபரப்பை ஏற்படுத்தியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.