நேரு உள்விளையாட்டு அரங்கில் விக்ரம் இசை வெளியீட்டு விழா!

author img

By

Published : May 10, 2022, 2:27 PM IST

பிரமாண்டமாக நடக்கும் விக்ரம் இசை வெளியீட்டு விழா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

கைதி, மாஸ்டர் திரைப்படங்களைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் "விக்ரம்" என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில், கமல்ஹாசனுடன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் ட்ரைலர் வரும் 15-ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இம்மாதம் 15-ஆம் தேதி சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: பிறந்தநாளன்று மச்சான்ஸ்-களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நமீதா!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.