இலங்கையில் தமிழர்களுக்கு நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - வைகோ
Updated on: May 13, 2022, 2:25 PM IST

இலங்கையில் தமிழர்களுக்கு நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - வைகோ
Updated on: May 13, 2022, 2:25 PM IST
இலங்கைக்கு அனுப்பக்கூடிய நிவாரண பொருட்கள் தமிழர்களுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கேட்டுக்கொண்டுள்ளனர்.
சென்னை: தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், திராவிடர் இயக்க பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ, "60 ஆண்டுகளாக இலங்கையில் வசிக்கக்கூடிய ஈழ தமிழர்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகி வருவதாகவும், தற்போது அங்கு பொருளாதார பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு உள்ள தமிழர்களின் துயரை துடைக்க கூடிய வகையிலும், இலங்கையில் உள்ள மக்களின் துயரை துடைக்கக் கூடிய வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 177 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்கும் நிலையில், இத்தகைய பொருட்களை அங்கு விநியோகம் செய்வதை கண்காணிக்க தமிழ்நாடு அதிகாரிகள் செல்ல இருப்பதாக தெரிவித்தார்.
இலங்கை தமிழர்களின் துயரை துடைக்க தமிழக முதலமைச்சர் ஆவன செய்வார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மத்திய அரசின் அனுமதி பெற்று இலங்கையில் நிவாரண பொருட்கள் வழங்குவதை கண்காணிக்க ஏற்பாடு செய்வதாகவும், இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு மத்திய அரசின் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறியதாகவும் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய அடிப்படையில் தமிழக அரசு வழங்க கூடிய நிவாரண உதவிகள் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சென்றடையக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: இலங்கை வன்முறை - தமிழக கடலோர பகுதிகளில் தீவிர ரோந்து பணி
