மாலை 3 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 3PM

author img

By

Published : Aug 5, 2021, 2:54 PM IST

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்திச்சுருக்கம்..

1. 'மக்களை தேடி மருத்துவம்' - பயனாளிகளின் இல்லம் தேடிச் சென்ற ஸ்டாலின்!

கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் ஸ்டாலின் பயனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று மருந்துகளை வழங்கி மக்களை தேடி மருத்துவம் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

2. சாதிப் பெயர் நீக்கம் - அதிமுக மீது பாயும் லியோனி

பாடப்புத்தகத்தில் சாதிப் பெயர் நீக்கம் என்பது அதிமுக ஆட்சியில் நடைபெற்றது எனத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி குற்றஞ்சாட்டியுள்ளார்.

3. மேகதாது அணை கட்ட எதிர்ப்பு - பாஜகவினர் உண்ணாவிரதம்

காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு அளித்து விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பாஜக சார்பில் தஞ்சையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

4. இல்லத்தரசிகளுக்கு ரூ.1000: ஆகஸ்ட் 15இல் அறிவிக்கிறார் ஸ்டாலின்?

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி ஆட்சிக்கு வந்தவுடன் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு சுதந்திர தின உரையில் வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

5. அதிகரிக்கும் கரோனா... திருப்பூரில் புதிய கட்டுப்பாடுகள்!

திருப்பூரில் கரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் வினித் உத்தரவிட்டுள்ளார்.

6. 5 மாவட்டங்களுக்கு மழை: மக்களே உஷார்!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. ஒலிம்பிக் 1928 டு டோக்கியோ 2020: இந்திய ஹாக்கி ஆண்கள் அணி கடந்துவந்த பாதை

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் ஹாக்கி ஆண்கள் பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இந்திய ஹாக்கி ஆண்கள் அணி வென்ற பதக்கங்கள் குறித்து காணலாம்.

8. 41 வருட தவம்: ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலம் வென்றது இந்தியா

டோக்கியோ: ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

9. நயன்தாராவின் நெற்றிக்கண் டைட்டில் டிராக் வெளியீடு

நடிகை நயன்தாரா நடித்துள்ள, 'நெற்றிக்கண்' படத்தின் டைட்டில் டிராக் வெளியாகியுள்ளது.

10. நேற்று விஜய் இன்று தனுஷ் நாளை?

உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகும், இதுவரை வரி செலுத்தாத நிலையில் வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க முடியாது. மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும்போது வரியை செலுத்த வேண்டியதுதானே. உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து வழக்கறிஞர்தானே மனுதாரருக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.