மின்விசிறியில் தூக்குப்போடுவதை தடுக்க ஸ்பிரிங் பொருத்தம்!

author img

By

Published : Nov 24, 2019, 3:35 PM IST

Updated : Nov 26, 2019, 1:02 PM IST

_fan_spring_

சென்னை: ஐ.ஐ.டியில் தொடர்ந்து மாணவர்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்வதைத் தடுப்பதற்காக மின்விசிறியில் ஸ்பிரிங் வடிவமைக்கப்பட்டு, அதனை பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை ஐ.ஐ.டியில் தங்கி படித்து வந்த கேராளவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இருமாநிலங்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில ஆண்டுகளில் சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் தங்கிப் படித்து வரும் மாணவர்கள் தற்கொலைகள் செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது.

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் புள்ளிவிவரம்
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் புள்ளிவிவரம்

இதனால் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் தற்கொலையில் ஈடுபடுவதை தடுக்க சுருள் வளைவு கம்பி (ஸ்பிரிங்) மற்றும் இரும்பு உருளை ஆகியவை மின்விசிறியுடன் இணைக்கப்பட்ட புதிய வகையான கருவி ஒன்று, சென்னை ஐ.ஐ.டி சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியை மின் விசிறியில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் புள்ளிவிவரம்
இந்தியாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் புள்ளிவிவரம்

மும்பையைச் சேர்ந்த ஷரத் அஸ்சானி என்பவர் தற்கொலையைத் தடுக்கும் வகையில் மின்விசிறியின் நடுவே ஸ்பிரிங் பொருத்தி, 20 கிலோ கிராம் எடையைத் தாங்கும் வகையில் உருளை வடிவிலான குழாயை கண்டுபிடித்திருந்தார். அதனைப் பெற்று சென்னை ஐ.ஐ.டி, 40 கிலோ எடையைத் தாங்கும் வகையில் மாற்றம் செய்து, அதனை பொருத்தி வருகின்றனர். இதன் மூலம் தற்கொலைகள் ஓரளவு தவிர்க்கப்படும் என ஷரத் அஸ்சானி தெரிவித்துள்ளார்.

மின் விசிறியை தவிர்த்து தற்கொலை செய்து கொள்ள எண்ணும் மாணவர்கள் வேறு சில வழிமுறைகளையும் மேற்கொள்ளலாம். எனவே ஐ.ஐ.டியில் பயிலும் மாணவர்களின் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கை, அதற்கான உளவியல் சார்ந்த ஆலோசனை வழங்க குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மின்விசிறியில் தூக்குப்போடுவதை தடுக்க ஸ்பிரிங் பொருத்தம்!
Intro:சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலையை
தடுக்க மின்விசிறியில் ஸ்பிரிங்க் பொருத்தம்
Body:சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலையை
தடுக்க மின்விசிறியில் ஸ்பிரிங்க் பொருத்தம்

சென்னை,

சென்னை ஐஐடியில் தொடர்ந்து மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதனைத் தடுப்பதற்காக மின்விசிறியில் ஸ்பிரிங் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னை ஐ.ஐ.டி விடுதியில்  தங்கி பயிலும் மாணவர்கள்   தற்கொலை செய்து கொள்வதை தடுக்க மின்விசிரியில்  சுருள் வளைவு கம்பியுடன்  (ஸ்பிரிங் ) இணைக்கப்பட்ட இரும்பு உருளையினை ஐ.ஐ.டி நிர்வாகம்   பொருத்தும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

சென்னை ஐ.ஐ.டியில் தங்கிபயில்கின்ற கேராளவைச் சேர்ந்த மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. மேலும் சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் தங்கி பயிலும் மாணவர்கள் கடந்த சில ஆண்டுகளில் தற்கொலைகள் செய்து கொள்ளும் சம்பவங்கள்  அதிகரித்து வருகிறது.
.இந்த நிலையில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் தற்கொலையில் ஈடுபடுவதை தடுக்க ,   சுருள் வளைவுகம்பி மற்றும்  இரும்பு உருளை ஆகியவை மின்விசிரியுடன் இணைக்கப்பட்ட புதிய வகையான  கருவி ஒன்றை சென்னை  ஐ.ஐ.டி சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவி   மின்விசிறியில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.


மும்பையை சேர்ந்த ஷரத் அஸ்சானி என்பவர் தற்கொலையை தடுக்கும் வகையில் மின்விசிறியில் நடுவே ஸ்பிரிங் பொருத்தி 20 கிலோ எடையை தாங்கும் வகையில் உருளை வடிவிலான குழாயை கண்டுபிடித்திருந்தார். அதனை பெற்று சென்னை ஐஐடியில் 40 கிலோ எடையை தாங்கும் வகையில் மாற்றம் செய்து தற்பொழுது பொருத்தி வருகின்றனர். இதனால் தற்கொலையை தடுப்பதில் பிரச்சனை ஏற்படும் என கூறினார்.

அந்த கருவி தற்போது விடுதி  மின்விசிறிகளில்   பொருத்தப்பட்டு வருகிறது. இந்தக் கருவி பொருத்தும் தற்பொழுது விடுதிகளில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இந்தக் கருவிகள் விடுமுறையின் போது அனைத்து வகுப்புகளிலும் பொருத்தப்பட உள்ளது.


மின்விசிறியை தவிர்த்து தற்கொலை செய்து கொள்ள எண்ணும் மாணவர்கள் வேறு சில வழிமுறைகளையும் மேற்கொள்ளலாம். எனவே ஐ.ஐ.டியில் பயிலும் மாணவர்களுக்கு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையினையும் ,பிரச்சனைகள் வந்தால் மாணவர்களுக்கான  ஆலோசனை வழங்கிட வேண்டும்.அதற்கு தேவையான குழுவினை முறையாக செயல்படுத்த வேண்டும் என்பது தான் சரியான தீர்வாக இருக்கும். Conclusion:
Last Updated :Nov 26, 2019, 1:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.