தொழிலதிபரைக் கடத்திய தமிழ்நாடு போலீஸ்: ஐஜியின் பங்கை வெளிக்கொண்டு வருமா சிபிசிஐடி?

author img

By

Published : Aug 7, 2021, 9:35 PM IST

Updated : Aug 9, 2021, 8:26 PM IST

TN Police Kidnap

புதிய நம்பிக்கையுடன் வாழ்க்கையைத் தொடர ராஜேஷ் கோயம்புத்தூருக்கு மாறியுள்ளார். மிரட்டிப் பணம் பறிப்பதில் ருசி கண்ட காவல்துறையினர், மீண்டும் ராஜேஷின் கதவுகளை தட்டியுள்ளனர்.

ஹைதராபாத்: 'வேலியே பயிரை மேய்ந்த கதை' ஒன்று சென்னை காவல்துறையில் நடந்துள்ளது. உயர் பதவியில் உள்ள காவல்துறை அலுவலர் ஒருவர், இளைஞர் ஒருவரைக் கடத்தி பணம் பறிக்கவும், பல கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்கவும் உதவியதாக தெரியவந்துள்ளது.

குற்றச்சாட்டிற்குள்ளாகியுள்ள காவல்துறை உயர் அலுவலர், சென்னை மாநகர காவலில், காவல்துறை தலைவர் நிலையில் இருந்தவர்; சட்டம் மற்றும் ஒழுங்கை கையாண்ட அவர், கூடுதல் ஆணையாளராக பணியாற்றினார். அவர், வேறு எங்கேனும் புகார் அளித்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என இளைஞர் ஒருவரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

சென்னையை அடுத்த அம்பத்தூரில், வி.என்.ஆர் இன்போசிஸ் என்ற பெயரில் பிபிஓ நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார் ராஜேஷ். இவருக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கி வந்தவரும், நண்பருமான வெங்கடேசன் என்பவர், செய்த வேலைகளுக்கான பணத்தை தாமதமாக வழங்கி வந்துள்ளார். இதனால் தனது நிறுவனத்தை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டார் ராஜேஷ்.

தொடர்ந்து வெங்கடேசனின் கடன் தொகை அதிகரித்தால் அவர், தனது நிறுவனத்தை விற்று ரூ.2 கோடி நிலுவைத் தொகையை ராஜேஷிற்கு வழங்கி உள்ளார். இதற்கு பின்பு ராஜேஷ், வெங்கடசனிடமிருந்து ரூ.5 கோடி கடனாக பெற்று, 2016ஆம் ஆண்டு சென்னைப் புறநகர் பகுதியில் 3 நிலங்களை வாங்கி புதியத் தொழில் தொடங்கியுள்ளார்.

இது நடந்து மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், திருமங்கலம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லப்பட்டிருகிறார் ராஜேஷ். காவல்நிலையத்தில், அவரது நண்பர் வெங்கடேசன், தனிநபர்களை ஏமாற்றி ரூ.20 கோடி மோசடி செய்துள்ளதாகவும், அந்த பணத்தை ராஜேஷின் வங்கிக்கணக்கில் போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ராஜேஷ் அவரது வருங்கால மனைவி, வயதான தாயார், வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் காவல்துறையினரின் கோபத்திற்கு ஆளகத்0 தொடங்கினர். பின்பு இளம் தொழில்அதிபரை மிரட்டிய, காவல்துறையினரின் ஆள் கடத்தல் மற்றும் பணம் பறிக்கும் படலம் தொடங்கியது.

தன் இயல்பை மறைத்து நியாயவாதியைப் போல நடித்த காக்கியுடை அணிந்த அந்த மூத்த உயர் அலுவலரின் உத்தரவின் படி, ராஜேஷின் முதல் சொத்து பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அம்மூத்த உயர் அலுவலர், காவல்துறையினரைக் கவனித்துக் கொள்ளும் படியும், வெங்கடேசன் ஏமாற்றிய பணத்திற்காக சொத்துக்களை ஒப்படைக்கும் படியும் ராஜேஷிற்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

தொடந்து நடந்த காவல்துறையினரின் மூன்றாம் தர சித்திரவதைகளால், ராஜேஷ் உதவி ஆணையர் சொல்லிய நபரின் பெயருக்கு, சொத்துக்களுக்கான அதிகாரத்தை(பவர்) வழங்கியுள்ளார்.

இதன் பின்னர் புதிய நம்பிக்கையுடன் வாழ்க்கையைத் தொடர ராஜேஷ் கோயம்புத்தூருக்கு இடம்பெயர்ந்துள்ளார். மிரட்டிப் பணம் பறிப்பதில் ருசி கண்ட காவல்துறையினர், மீண்டும் ராஜேஷின் கதவுகளை தட்டினர்.

கடந்த 2019 அக்.,1ஆம் தேதி தன் வருங்கால மனைவியுடன் விடுதி ஒன்றில் தங்கியிருந்த அவரை மிரட்டி, அங்கிருந்து செங்குன்றத்தில் இருக்கும் பண்ணை வீட்டிற்கு கடத்திச் சென்றனர். அங்கு, கடத்தல் கும்பலில் இருந்த காவலர்கள் உட்பட ஒவ்வொருவராலும் அவரது காதலி, வல்லுறவிற்கு ஆளாக்கப்படுவார் என்றும், அப்பெண்ணின் சகோதரனும், ராஜேஷின் தாயாரும் கொல்லப்படுவார்கள் என்றும் மிரட்டப்பட்டார் ராஜேஷ். மேலும் ராஜேஷை கஞ்சா கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கில் கைது செய்ய உள்ளதாகவும் கடத்தலில் ஈடுபட்ட காவல்துறையினர் மிரட்டி உள்ளனர்.

இறுதியில் அனைத்து சொத்துகளின் விபரங்களையும், அவர் கடன் வழங்கியுள்ள நபர்களின் விபரங்களையும் ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதில் ஒரு பகுதி காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, ராஜேஷ் மற்றும் வெங்கடேசன் இருவரிடமிருந்தும் காவல்துறையினர் முத்திரைத் தாள், பத்திரங்கள் மற்றும் காசோலைகளில் கையெழுத்து வாங்கிக்கொண்டனர்.

பயம் காரணமாக இதுவரை இந்த விவகாரத்தில் ஐஜி நிலையிலான அலுவலரின் பங்குபற்றி வெளிப்படுத்தாத ராஜேஷ், தற்போது, ஜஜி நிலையில் உள்ள அலுவலரின் பெயரைக் குறிப்பிட்டு, தனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், மாநில காவல் துறை இயக்குனர், சிபிசிஐடி உயர் அலுவலர்ளுக்கு புகார் கடிதங்களை அனுப்பியுள்ளார்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, சிறப்பு டிஜிபியின் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சட்டத்திற்கு உட்பட்ட வழிமுறைகளில் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தெரிவித்திருந்தது. அதன்படி, அந்த டிஜிபியின் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. அதே போல, அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, ஐஜி நிலை அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? சிறப்பு டிஜிபி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் துரிதமாக செயல்பட்ட சிபிசிஐடி இந்த வழக்கிலும் அந்த நிலைத்தன்மையுடன் செயலாற்றுமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: தொழிலதிபரைக் கடத்தி சொத்துகள் அபகரிப்பு: 10 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு!

Last Updated :Aug 9, 2021, 8:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.