காவல் துறையின் அதிரடி நடவடிக்கை - கொத்தாக கைதான ரவுடிகள்

author img

By

Published : Sep 25, 2021, 2:08 PM IST

காவல் துறையின் அதிரடி நடவடிக்கை

தமிழ்நாடு காவல் துறை நடத்தி வரும் "ஸ்டாமிங் ஆப்பரேஷன்" மூலம் 36 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 512 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் ரவுடிகள் இடையே முன்பகை காரணமாக கோஷ்டி மோதல் உருவாகி, அதன் மூலம் கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மாநிலத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு காவல் துறை "ஸ்டாமிங் ஆப்பரேஷன்" மூலம் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக நேற்றைய (செப்.25) தினம் நள்ளிரவு தொடங்கி தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உள்பட பல்வேறு குற்றவாளிகளின் வீடு, பதுங்கியிருக்கும் இடங்களில் காவல் துறையினர் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.

அதிரடி சோதனை

இதுவரை 36 மணி நேரம் நடத்தப்பட்டுள்ள இந்த தேதல் வேட்டையின் மூலம் பழைய குற்றவாளிகள், ரவுடிகள் என சுமார் 2 ஆயிரத்து 512 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதில் 244 குற்றவாளிகள் நிலுவையிலுள்ள நீதிமன்ற வழக்குகளின் பிடியாணையின்படி கைது செய்யப்பட்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதுங்கள்
பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதுங்கள்

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 733 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆயிரத்து 927 நபர்களிடம் இருந்து நன்னடத்தைக்கான பிணை ஆணை பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்டை தொடரும்

மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5 நாட்டுத் துப்பாக்கிகள், 929 கத்திகள், அரிவாள்கள், பயங்கர ஆயுதங்கள் என மொத்தம் 934 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிரான காவல் துறையின் இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் எனவும் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: போலி காசோலை மூலம் ரூ.10 கோடி சுருட்ட முயன்ற வழக்கு - மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.