ETV Bharat / city

'மாணவர்கள் அதிகமுள்ள பள்ளிகளில் சுழற்சி வகுப்புகள் வேண்டும்'

author img

By

Published : Jan 29, 2022, 6:34 AM IST

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் நலனைக் கருத்தில்கொண்டு மாணவர்கள் அதிகமுள்ள பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு
தமிழ்நாடு

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதேவேளையில் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை வசதிகள் இல்லாமல் இருக்கிறது.

எனவே அதிக மாணவர்கள் உள்ள பள்ளிகளில் சுழற்சி முறை வகுப்புகளை அமல்படுத்த வேண்டும். குறிப்பாக இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. இதனை கருத்தில்கொண்டு பள்ளிகள் அரசு செயல்படவேண்டும்.

தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நலக் கூட்டமைப்பின் தலைவர் அருணன் கோரிக்கை

பள்ளிக்கல்வித் துறைக்கு கோரிக்கை

இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நலக் கூட்டமைப்பின் தலைவர் அருணன் கூறுகையில், வரும் பிப்.1ஆம் தேதி முதல் பள்ளி திறப்பது வரவேற்கக்கூடிய அறிவிப்பு என்றாலும், வகுப்பறை பற்றாக்குறை உள்ளதை நினைவில்கொள்ள வேண்டும். கூடுதலாக மாணவர்கள் உள்ள பள்ளிகளில் கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவது சிரமம். எனவே, சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவதற்கு அரசு உத்தரவிட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 'கிராமப்புற மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திட்டங்கள்'- சென்னை ஐஐடி புதிய இயக்குநர் காமகோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.