எம்.இ, எம்டெக், எம்ஆர்க் மாணவர் சேர்க்கை - ஆகஸ்ட் 3 ஆம் வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

author img

By

Published : Jul 4, 2022, 4:16 PM IST

அண்ணா பல்கலை

தமிழ்நாட்டிலுள்ள அரசு, அரசு உதவிபெறும், அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும்‌ உறுப்புக்‌ கல்லூரிகள்‌, அண்ணாமலை பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ சுயநிதி பொறியியல்‌ கல்லூரிகளில்‌ உள்ள முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு ஆக.3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும், அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும்‌ உறுப்புக்‌ கல்லூரிகள்‌, அண்ணாமலை பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ சுயநிதி பொறியியல்‌ கல்லூரிகளில்‌ உள்ள முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பொறியியல் படிப்பிற்கான மாணவர்கள் பொது சேர்க்கை பிரிவின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், '2022-2023 கல்வி ஆண்டில் சேருவதற்கான எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க் உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கு ஆகஸ்ட் 3 ந் தேதி வரையில் ஆன்லைன் மூலம் https://tanca.annauniv.edu/tanca22/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 2022 தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு அல்லது கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் விண்ணப்பப் படிவத்துடன், தேவைப்படும் சான்றிதழ் நகல்களுடன் தொடர்புடைய கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழக துறைகளுக்கு இயக்குனர், மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக் கழகம், சென்னை – 600 025 என்ற முகவரிக்கும், அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு முதல்வர் ,கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரிக்கும், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தொடர்புடைய கல்லூரிகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொறியியல் படிப்பில் சேர கட் ஆஃப் 33 மதிப்பெண் வரை குறையலாம் - கல்வி ஆலோசகர் அஸ்வின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.